மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அதிக ரன்கள் குவிக்கும் வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வாலை முன்னாள் இந்திய வீரர் அபிஷேக் நாயர், தேர்ந்தெடுத்துள்ளார். முதல் டெஸ்டில் மற்ற வீரர்கள் அதிக ரன்கள் குவித்ததைப் பார்த்து, அவர் ஆர்வத்துடன் இருப்பார் என்று நாயர் சுட்டிக்காட்டினார்.
அகமதாபாத்தில் அக்டோபர் 4ஆம் தொடங்கிய டெஸ்ட் போட்டியில் இந்தியா மேற்கிந்திய தீவுகளை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் 448/5 என்ற கணக்கில் டிக்ளேர் செய்யப்பட்டபோது, ஜெய்ஸ்வால் 54 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்.
ஜெய்ஸ்வால் ரன் குவிப்பார்:
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், இரண்டாவது டெஸ்டில் இந்தியாவின் அதிக ரன்கள் குவிக்கும் வீரர் யார் என கேட்கப்பட்டபோது, பதில் அளித்த நாயர் “என்னைப் பொறுத்தவரை யஷஸ்வி ஜெய்ஸ்வால். ஏனெனில், அவர் ஒரு முறை செட் ஆனால், அவர் ரன்களை வேகமாகக் குவிப்பார். பெரிய ரன்களை அடிப்பார்.”
“அவர் பசியுடன் இருப்பார். ஏனெனில் ஒரு வாய்ப்பை வீணடித்தார். அவர் வழக்கமாக 37 ரன்களில் அவுட் ஆவதில்லை. அவர் ஒருமுறை அவுட் ஆகிவிட்டார், மற்றவர்கள் ரன்கள் குவிப்பதைப் பார்த்தார். அடுத்த ஐந்து நாட்களில், அவர் ஒரு பெரிய இன்னிங்ஸாக மாற்ற வேண்டும் என்று நினைப்பார். எனவே, எனது பந்தயம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீது உள்ளது” என்று நாயர் கூறினார்.
ராகுல் குறித்து கருத்து:
யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் தொடக்க ஜோடியான கே.எல்.ராகுல், டெல்லியில் உள்ள கருப்பு மண் ஆடுகளத்தில் தனது அணுகுமுறையை மாற்ற வேண்டியிருக்கும் என்பது குறித்து, அபிசேக் நாயர் பேசினார். அதில், “தொழில்நுட்பம் இல்லை, சிந்தனை முறை. அவர் அங்கு ஐபிஎல் ஆடியவர்.”
“எனவே, அந்த நிலைமைகளை நன்கு அறிவார். அவர் ஐபிஎல்லில் 500-க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்தார். டெல்லியில் உள்ள ஃபெரோஷா கோட்லா ஆடுகளத்தில் ரன்கள் எடுக்கத் தெரியும். ஆனால், மிகப்பெரிய மாற்றம் அணுகுமுறையில் உள்ளது. அந்த அணுகுமுறையை பெரிய ரன்களாக மாற்ற அவர் விரும்புவார். ராகுல் 100 ரன்களில் அவுட் ஆனார். ஆனால் 150 அல்லது 200 ரன்கள் எடுக்க வாய்ப்பு இருந்தது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ரன்கள் எடுத்திருக்கிறார் என்பது அவருக்குத் தெரியும்.”
இதையும் படிங்க: இந்திய அணியால் ரோஹித் கோலி இந்த முடிவைதான் எடுக்க போறாங்க.. இந்திய முன்னாள் வீரர் தகவல்
“ஆனால், ஃபார்ம் இருக்கும்போது, அதைப் பராமரித்து, தொடர்ந்து ரன்கள் எடுக்க வேண்டும். அவரது பசி தீராது. ஒருமுறை தொடங்கிவிட்டால், அவர் நிற்க மாட்டார், ஐந்தாவது கியருக்கு சென்று, அங்கேயே இருப்பார். எனவே, கே.எல்.ராகுல் இந்த ஃபார்மைத் தொடர்ந்து, முன்னேறி ரன்கள் குவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் உள்ளது,” என்று நாயர் கூறினார்.






