வீடியோ: இது நிஜமாவே அவுட் தானா? 3வது எப்படி மிஸ் பண்ணினாரு? – சர்ச்சையான ரன் அவுட்!

0
2128

இந்தியா பங்களாதேஷ் மோதிய போட்டியில் சர்ச்சையில் தினேஷ் கார்த்திக் சிக்கிய ரன் அவுட் விவகாரம். வீடியோ இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றின் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டம் என்பதால், மழையை பொருட்படுத்தாமல் மைதானத்தில் கூட்டம் வழிந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் டாசை இழந்து முதலில் பேட் செய்த இந்திய அணி கேஎல் ராகுல்(51) மற்றும் விராட் கோலி(64*) ஆகியோரது அரை சதங்களால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 184 ரன்கள் எடுத்தது.

ரன்-அவுட் விவகாரம்:

களத்தில் விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, தினேஷ் கார்த்திக் ஓட முயற்சித்து ரன் அவுட் ஆகி வெளியேறினார். அப்போது பௌலிங் முனையில் இருந்த வங்கதேச வீரர் பந்தை பிடித்து அடிக்க முயற்சித்தார். ஆனால் பந்து அவரது கையில் இருந்து நழுவி வெளியே சென்றது. அவரது கை மட்டுமே ஸ்டம்ப்பில் பட்டது.

- Advertisement -

இந்த முடிவு மூன்றாம் நடுவரிடம் சென்றபோது அவரும் அவுட் என்று கொடுத்தார். ஆனால் தொடர்ந்து அந்த வீடியோ பதிவை பார்க்கையில் அது அவுட் இல்லை என்று தெரிந்ததால் தற்போது இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது

இதற்கடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் துவக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ், பவர்-பிளே ஓவரில் இந்திய பந்துவீச்சாளர்களை கதிகலங்க செய்தார். வேறும் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசி 21 பந்துகளில் 50 ரன்கள் விளாசி இந்திய அணிக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கினார்.

பங்களாதேஷ் அணி ஏழு ஓவர்களுக்கு 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை வந்து ஆட்டம் தடைபட்டது. இதற்குப் பிறகு ஆட்டம் துவங்கிய நிலையில், டக்-வோர்த் லூயிஸ் முறைப்படி பங்களாதேஷ் அணிக்கு 16 ஓவர்களில் 151 ரன்கள் இலக்காக வைக்கப்பட்டது. பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் 16வது ஓவரில் வங்கதேச அணிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. அதனை கட்டுப்படுத்தி 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

வீடியோ: