டாஸ் முடிந்தது.. தோனி வழியில் செல்லாத ரோகித்.. ஆச்சரியப்படுத்தும் மாற்றம்.. வேலை செய்யுமா?

0
1089
Rohit

தற்பொழுது டெல்லியில் இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு டாஸ் நடைபெற்ற முடிந்து இருக்கிறது.

இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முதலில் தங்கள் அணி பேட்டிங் செய்யும் என தைரியமாக அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் ஆப்கானிஸ்தான் அணி தங்களது முதல் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக தரம்சாலா மைதானத்தில் விளையாடிய அதே அணியைக் கொண்டு தற்பொழுது விளையாடுகிறது.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் வெற்றி பெற்ற அணி உடன் தோனி வழியில் செல்லாமல், ஒரு மாற்றத்தை செய்திருக்கிறது. ஆனால் அந்த மாற்றம் சரிதானா? என்பது தற்பொழுது கேள்வியாக இருக்கிறது.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடிய அதே அணியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக சர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

அஸ்வின் மாற்றப்படுவார் என்று பல பேர் முன்கூட்டியே தங்களது கருத்துக்களை கூறி வந்தார்கள். ஆனால் அவருடைய இடத்தில் உலக தரமான வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி விளையாட வேண்டும் என்று குறிப்பிட்டார்கள்.

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பெரிய அளவில் பேட்டிங்கில் ஏதும் செய்யாத சர்துல் தாக்குவதற்கு பேட்டிங் ஆல்ரவுண்டர் என்று எட்டாவது இடத்தில் வாய்ப்பு தருவது சரியல்ல என்கின்ற பேச்சு இருக்கிறது. இந்த நிலையில் அவருக்கு வாய்ப்பு தரப்பட்டு இருக்கிறது. இந்திய அணியின் லெஜெண்ட் அனில் கும்ப்ளே கூட சமிக்குதான் வாய்ப்பு தரவேண்டும் என்று கூறி இருந்தார்.

டாஸ் நிகழ்வில் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா “நாங்கள் இரண்டாவது பேட் செய்யவே எதிர்பார்த்தோம். நேற்று பனிப்பொழிவு இருந்ததை கண்டோம். கடந்த ஆட்டத்தில் நாங்கள் ஆரம்பத்தில் அழுத்தத்தில் இருந்தோம். ராகுல் மற்றும் கோலி சிறப்பாக விளையாடி அணியை மீட்டார்கள். அவர்கள் அனுபவம் வாய்ந்த அற்புதமான பேட்ஸ்மேன்கள்.

எங்கள் செயல் திறனில் நாங்கள் பெருமைப்படுகிறோம். எங்களுக்கு அது ஒரு நல்ல விளையாட்டாக இருந்தது. அதையே நாங்கள் மீண்டும் தொடர்வோம். இந்த போட்டியில் அஸ்வின் இடத்தில் சர்துல் தாகூர் இடம் பெறுகிறார்!” என்று கூறி இருக்கிறார்!