2025 ஐபிஎல் தக்கவைக்கப்படாமல்.. மெகா ஏலத்திற்கு வரும் 17 நட்சத்திர வீரர்கள்.. முழு பட்டியல்

0
528
IPL

அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்திற்கு ஐபிஎல் அணிகளால் தக்கவைக்கப்படாமல் 17 நட்சத்திர வீரர்கள் வருகிறார்கள். அவர்கள் யார் என்ற பட்டியலை பார்க்கலாம்.

கழட்டி விடப்பட்ட கேப்டன்கள்

வீரர்கள் தக்க வைப்பின் பெரிய ஆச்சரியமாக டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், கொல்கத்தா அணிக்கு சாம்பியன் பட்டத்தை இந்த வருடம் வென்று கொடுத்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், லக்னோ அணியின் கேப்டன் கேஎல்.ராகுல், ஆர்சிபி அணியின் கேப்டன் பாப் டு பிளேசிஸ் என நான்கு கேப்டன்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இது ஐபிஎல் வட்டாரத்தில் பெரிய ஆச்சரிய அலைகளை உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ஜோஸ் பட்லர், ட்ரெண்ட் போல்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சாகல் என நான்கு வீரர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் ஆர்சிபி அணியில் இருந்து கிளன் மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் வெளியிடப்பட்டு இருக்கிறார்கள்.

சிஎஸ்கே அணியின் வீரர்கள்

சிஎஸ்கே அணியில் இருந்து டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்தரா வெளியிடப்பட்டு இருக்கிறார்கள். மேலும் பஞ்சாப் அணியில் இருந்து அர்ஸ்தீப் சிங், கொல்கத்தா அணியில் இருந்து மிட்சல் ஸ்டார்க், மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து இஷான் கிஷான், லக்னோ அணியில் இருந்து மார்க்கஸ் ஸ்டோய்னிஸ், ஹைதராபாத்தில் நடராஜன் ஆகியோர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்

- Advertisement -

17 முக்கிய வீரர்கள்

கேஎல்.ராகுல், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், பாப் டு பிளேசிஸ், ஜோஸ்,பட்லர், ரவிச்சந்திரன் அஸ்வின், சாகல், டிரண்ட் போல்ட், கிளன் மேக்ஸ்வெல், முகமது சிராஜ், டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்தரா, அர்ஸ்தீப் சிங், மிட்சல் ஸ்டார்க், இஷான் கிஷான், மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் நடராஜன்.

இதையும் படிங்க : ஆச்சரியப்படுத்திய மும்பை.. 5 மெகா வீரர்களை தக்க வைத்தது.. 5 லட்ச வித்தியாச விலையில் மாஸ்டர் பிளான்

நடைபெற இருக்கும் மெகா ஏலத்தில் இந்த 17 வீரர்களுக்கும் பெரிய அளவில் போட்டி நடப்பது உறுதி. மேலும் இவர்கள் மட்டும் இல்லாமல் புவனேஸ்வர் குமார், உம்ரான் மாலிக், தீபக் ஹூடா, மேலும் அன்கேப்டு சமீர் ரிஸ்வி மாதிரியான புதிய வீரர்களுக்கும் ஐபிஎல் தொடரில் ஓரளவுக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -