மும்பை இந்தியன்ஸ் அணி 2025 ஐபிஎல் தொடருக்கு 5 முக்கிய வீரர்களை தக்க வைத்து அறிவிப்பை வெளியிட்டு அந்த அணியின் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறது.
இன்று ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் அடுத்த வருடம் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கு வீரர்களை தக்க வைப்பு பட்டியலை ஒரே நேரத்தில் வெளியிட்டன. இதில் மும்பை இந்தியன்ஸ் தக்க வைத்திருக்கும் ஐந்து வீரர்களும் பெரிய வீரர்களாக அமைந்திருக்கிறார்கள்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் மெகா வீரர்கள்
மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் பொறுப்பு கொடுக்கப்படாததால் ரோகித் சர்மா வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ரோகித் சர்மாவை தக்க வைத்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அந்த அணியின் ரசிகர்களை சமாதானம் அடைய வைத்திருக்கிறது.
மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா, சூரியகுமார் யாதவ், கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா என நான்கு பெரிய வீரர்களை தக்க வைத்திருக்கிறார். இதன் மூலமாக 10 அணிகளில் பலமான வீரர்களை தக்க வைத்த அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது.
5 லட்ச ரூபாய் வித்தியாசம்
மும்பை இந்தியன்ஸ் அணியில் முதல் வீரராக பும்ராவை 18 கோடிக்கு தக்க வைத்திருக்கிறார்கள். இதற்கு அடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியாவை தலா 16.35 கோடி ரூபாய்க்கு ஒரே விலைக்கு தக்க வைத்திருக்கிறார்கள். நான்காவது வீரரான ரோகித் சர்மாவுக்கு 16.30 கோடி ரூபாய் கொடுத்து இருக்கிறார்கள். இவர்களைவிட அவருக்கு 5 லட்ச ரூபாய் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சிஎஸ்கே 5 வீரர்கள் தக்கவைப்பு.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்.. தோனிக்கு ஸ்பெஷல் கேட்டகிரி.. வெளியான அறிவிப்பு
மேலும் ஐந்தாவது வீரராக திலக் வர்மாவுக்கு 8 கோடி ரூபாய் கொடுத்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி மொத்த தொகையான 120 கோடி ரூபாயில் 75 கோடி செலவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.