“நேத்து நான் நல்லா ஃபினிஷ் செய்ய காரணமே.. இந்த இந்திய வீரர்தான்!” – ஆச்சரியப்படுத்திய ரிங்கு சிங்!

0
1409
Rinku

இந்திய கிரிக்கெட்டில் சமீபகாலமாக இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இடதுகை பேட்ஸ்மேன்கள் இல்லாதது பெரிய குறையாகவே இருந்து வருகிறது.

இந்திய அணியில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் ஜாஹீர் கான், நெக்ரா, இர்பான் பதான், மேலும் இடதுகை பேட்ஸ்மேன்கள் கம்பீர், யுவராஜ் சிங் சுரேஷ் ரெய்னா என சரியான கலவையில் அமைந்திருந்தது.

- Advertisement -

ஆனால் இதற்கு அடுத்து திடீரென முழுக்க முழுக்க இந்திய கிரிக்கெட் வலதுகை பந்துவீச்சாளர்கள் மற்றும் வலதுகை பேட்ஸ்மேன்கள் என மாறிப்போனது. இதனால் சில குறிப்பிட்ட பந்துவீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தினார்கள். மேலும் அவர்கள் சீக்கிரம் வந்து வீச்சில் செட்டில் ஆனார்கள். இது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

இந்த நிலையில் தற்பொழுது இந்திய அணியில் இதற்கு தீர்வு தரும் விதமாக இடதுகை பேட்ஸ்மேன்கள் ஜெய்ஸ்வால், திலக் வர்மா மற்றும் ரிங்கு சிங் என பேட்டிங் யூனிட்டில் மூன்று வெவ்வேறு இடங்களில் விளையாடக்கூடிய திறமையான இடதுகை பேட்ஸ்மேன்கள் கிடைத்திருக்கிறார்கள்.

மூவருமே சிறப்பானவர்கள் என்றாலும், பினிஷிங் ரோலில் கடினமான இடத்தில் மிகச்சிறப்பாக ரிங்கு சிங் செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ரிங்கு சிங், இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு குறுகிய காலத்தில் மூன்று முறை மிகச் சிறப்பான பினிஷிங் செய்திருக்கிறார். நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் அது தொடர்ந்தது.

இந்த நிலையில் தான் சிறப்பாக பினிஷிங் செய்வதற்கான காரணத்தை கூறிய ரிங்கு சிங் ” நான் ஒருமுறை மகேந்திர சிங் தோனி பாய் இடம் இறுதிக்கட்ட ஓவர்களில் எப்படி விளையாடுவது என்று கேட்டேன். அதற்கு அவர் இறுதிக்கட்ட ஓவர்களில் எப்படி இயல்பாக அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறினார். நேற்று நான் அவர் கூறியதை பின்பற்றி எனக்கு உதவி செய்து கொண்டேன்!” என்று தெரிவித்திருக்கிறார்!

மகேந்திர சிங் தோனி எந்த கிரெடிட்டுக்கும் ஆசை படாவிட்டாலும் கூட, அவரைத் தேடி கிரெடிட் என்பது வந்து கொண்டுதான் இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பின்பும் கூட அவர் ஒரு பேசு பொருளாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!