வீடியோ- 1 கோடி பந்துகள் வீசி பார்த்து இருக்கிறேன்..ஆனால் இப்படி ஒரு ஷாட்டை ஏன் வாழ்நாளில் பார்த்தது இல்லை.. சூர்யகுமாருக்கு ஆஸி வீரர் , சச்சின் பாராட்டு

0
3951

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு சாம்பியன் குஜராத்தை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.இதில் சூரியகுமார் யாதவ் 49 பந்துகள் எதிர் கொண்டு 103 ரன்கள் விளாசினார். இதில் 11 பவுண்டரிகளும், ஆறு சிக்ஸர்களும் அடங்கும்.

19வது ஒவ்வொரு வரை 87 ரன்களில் இருந்த சூரிய குமாரை கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர்களை பறக்க விட்டார். சூரியகுமார் யாதாவின் ஆட்டத்தை பார்த்து மைதானத்தில் இருந்த சச்சின் டெண்டுல்கரும் கைதட்டி ரசித்து பாராட்டினார்.இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள சச்சின், சூர்யகுமார் நேற்று வாண வேடிக்கை காட்டியதில், என்னை கவர்ந்த ஷாட், தெர்ட் மேன் திசையில் ஷமி பந்தில் சிக்சர் அடித்தது தான் என்று கூறினார்.உலக கிரிக்கெட்டில் வேறு எந்த பேட்ஸ்மேனாலும் அப்படி ஒரு ஷாட் ஆடுவது கடினம் என்றும் சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

போட்டி முடிந்த உடன் பேசிய எதிரணி கேப்டன் ஹர்திக் பாண்டியா கூட சூரிய குமார் யாதவுக்கு பில்டிங் நிறுத்துவது மிகவும் கடினமான விஷயம் என்றும் கூறினார். இந்த நிலையில் சூரியகுமார் யாதவ் ஆட்டம் குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி கூறிய கருத்துக்களை தற்போது பார்க்கலாம்.

சூரியகுமார் யாதவுக்கு பந்து வீசுவது என்பது மிகவும் சவாலான காரியம். அதுவும் அந்த ஒரு ஷாட் பேட்டை நேராக வைத்து அடித்து பந்து தெர்ட் மேன் திசையில் சிக்ஸர் சென்றதெல்லாம் என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை. பேட்டை சாய்த்து தெர்ட் மேன் திசையில் பேட்ஸ்மேன்கள் அடித்ததை நான் பார்த்திருக்கிறேன்.

இவ்வளவு ஏன் பந்து பேட்டில் பட்டு எட்ஜாகியும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு ஷாட் நான் பார்த்ததில்லை. இதுவரை அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் சுமார் ஒரு கோடி பந்துகள் வீசப்பட்டு நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அப்படி ஒரு பேட்ஸ்மேன் சிக்ஸர் அடித்து இப்போதுதான் முதல் முறை பார்க்கிறேன்.

- Advertisement -

இது சூரியகுமார் யாதவ் மனதளவில் எவ்வளவு பலமாக இருக்கிறார் என்பதை காட்டுகிறது. அதனால் தான் அவரால் இப்படி எல்லாம் அதிரடியாக விளையாட முடிகிறது என்று கூறினார். இதேபோன்று கருத்து தெரிவித்துள்ள இயன் பிஷப், சூரியகுமார் யாதவ் அடித்த ஷாட் நிச்சயம் கணிக்க முடியாதது. இந்த தொடரிலே சிறந்த ஷாட் என்று நான் அதை தான் கூறுவேன் என்றார்.

சூரியகுமார் குறித்து பாராட்டிய ரோகித் சர்மாவும் அவருக்கு இருக்கும் தன்னம்பிக்கை மற்ற பேட்ஸ்மேன்களையும் சிறப்பாக விளையாட வேண்டும் என தூண்டுவதாக கூறினார். சூரியகுமார் யாதவிடம் இருக்கும் நல்ல விஷயமே ஒவ்வொரு போட்டியையும் புதிய ஆட்டமாக தான் அவர் பார்ப்பார் என்றும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் இந்த பழக்கம் இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.