மும்பை இந்தியன்ஸ் அணி எந்த வீரர்களை தக்க வைக்கும்? என்றும், யார் எவ்வளவு பணத்திற்கு தகுதியானவர்களாக இருப்பார்கள்? எனவும் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் டாம் மூடி கூறியிருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கு ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் எனவும், அவர்கள் ஆறு பேருமே இந்தியர்களாக இருக்கலாம் ஆனால் ஒருவர் அன்-கேப் வீரராக இருக்க வேண்டும் எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் வீரர்கள் தக்கவைப்பு விதி
ஐபிஎல் அணிகள் தாங்கள் தக்க வைக்கும் முதல் மூன்று வீரர்களுக்கு 18, 14 மற்றும் 11 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். இதேபோல ஐந்தாவது மற்றும் ஆறாவது வீரருக்கு 18 மற்றும் 14 கோடிகள் கொடுக்க வேண்டும். மேலும் ஒரு அன் கேப்டு வீரரை தக்க வைத்தால் அவருக்கு நான்கு கோடிகள் கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியான நிலையில் தக்க வைக்கும் முதல் வீரருக்கும் நான்காவது வீரருக்கும் 18 கோடி கொடுக்க வேண்டும் என்பதால், யார் எத்தனை வீரர்களை தக்க வைப்பார்கள்? யார் 18 கோடி ரூபாய்க்கு தகுதியான வீரர்களாக இருப்பார்கள்? என்பது நிறைய விவாதங்களுக்கு சென்று கொண்டிருக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா, பும்ரா, சூரியகுமார் மற்றும் ஹர்திக் பாண்டியா என நான்கு நட்சத்திர வீரர்கள் இருக்கிறார்கள்.
18 கோடி யாருக்கு கிடைக்கும்?
“கடந்த ஐபிஎல் தொடரில் நடந்த விஷயங்களை வைத்து பார்க்கும் பொழுது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஏமாற்றம் அடைந்து இருப்பார். என்னைப் பொறுத்த வரையில் மும்பை அணியில் 18 கோடிக்கு தகுதியான வீரர்களாக சூரியகுமார் மற்றும் பும்ரா இருவரும் இருப்பார்கள். ஹர்திக் பாண்டியா 14 கோடி பெறலாம்”
“ஒரு அணியை விட்டு விலகுவது என்பது அவரவர் முடிவு. மேலும் அவருடைய செயல் திறன் மற்றும் உடல் தகுதியை பொறுத்து இது அமைகிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது ஹர்திக் பாண்டியா 18 கோடிக்கு தகுதியானவராக இருக்கிறாரா? அவர் அவ்வளவு மதிப்புள்ள வீரரா?”
இதையும் படிங்க : அஸ்வின் எப்பவும் நாடகம் ஆட மாட்டாரு.. அவருக்கான அந்தஸ்த இன்னுமே கொடுக்கல – பாக் ரமீஷ் ராஜா பேட்டி
“நீங்கள் 18 கோடி வீரராக இருக்க வேண்டும் என்றால் மேட்ச் வின்னர் ஆக இருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு போட்டியிலும் அப்படியே செயல்பட வேண்டும். ஹர்திக் பாண்டியா கடந்த ஐபிஎல் தொடரில் செயல் திறன் மற்றும் உடல் தகுதி என இரண்டிலுமே மிகவும் போராட செய்தார். எனவே அவருக்கு 18 கோடிகள் மிக அதிகம்” என்று கூறியிருக்கிறார்.






