ஆசியக் கோப்பையில் இன்று இலங்கை அணியின் தலையெழுத்தை தீர்மானிக்கும் போட்டி!

0
104
Ban vs Afg

நேற்று முன்தினம் 15வது ஆசிய கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் சர்வதேச மைதானத்தில் இலங்கை ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் மூலம் துவங்கியது!

இந்த போட்டியில் முதலில் டாசில் வென்று ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமது நபி பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆப்கானிஸ்தான் அணியின் சிறந்த பந்துவீச்சு தாக்குதலால் நிலைகுலைந்த இலங்கை அணி 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

- Advertisement -

அடுத்து எளிய இலக்கை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தான் அணி பவர் பிள வில் விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் குவித்து அசத்தி, 10.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்களை சேஸ் செய்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஏறக்குறைய ஆப்கானிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது என்றே கூறலாம். ஏனென்றால் ஒரு குழுவில் மூன்று அணிகள் இடம் பெறும். இதில் ஒரு அணிகளுக்கு 2 போட்டிகள் முதல் சுற்றில் கிடைக்கும். இதிலிருந்து முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். ஆப்கானிஸ்தான் அணி இலங்கை அணியுடன் பெற்ற அபார வெற்றியால் 5.176 என்ற மிகச் சிறப்பான ரன் ரேட்டை பெற்று இருக்கிறது. இந்த ரன்ரேட் காரணமாக கணிப்பான் அணி அடுத்த சுற்றுக்கு ஏறக்குறைய நுழைந்துவிட்டது.

ஏனென்றால் இன்று பங்களாதேஷ் அணியுடன் மோதும் போட்டியில் இலங்கை அணி போல மோசமாக தோற்காமல் இருந்தாலே போதும். ரன் ரேட் அடிப்படையில் குழுவில் முதல் இரண்டு அணிகளில் ஒரு அணியாக ஆப்கானிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். இலங்கை அணியின் நிலைமைதான் தற்போது மோசமாக இருக்கிறது.

- Advertisement -

இலங்கை அணி அடுத்த சுற்றுக்குள் நுழைய வேண்டுமென்றால், இன்று பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே நடைபெறும் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டும். அடுத்து இலங்கை பங்களாதேஷ் அணியுடன் வெற்றி பெறவேண்டும். இரண்டு தோல்விகளை பங்களாதேஷ் அணி பெற்றால் மட்டுமே இலங்கை அணியால் அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும்.

இலங்கை அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு ஆப்கானிஸ்தான் அணியின் கையில் இருப்பதாலும், சமீப காலத்தில் ஆப்கானிஸ்தான் அணி மிகப் பெரிய அணிகளுக்கும் மிகச்சிறந்த சவாலை கொடுக்கும் அணியாக உருவெடுத்து வருவதாலும், இன்று சார்ஜா மைதானத்தில் நடக்க இருக்கும் போட்டி முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடிய ஒரு போட்டியாக மாறுகிறது!

சமீபத்தில் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்த பங்களாதேஷ் அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரை 2 க்கு 1 என அதிர்ச்சிகரமாக இழந்தது. தற்போது இதற்கு பதில் சொல்லும் விதமாக ஆசிய கோப்பையில் அடுத்த சுற்றுக்கு நுழைய வேண்டிய கட்டாயத்தில் பங்களாதேஷ் அணி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!