தற்போது பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர்கள் ரச்சின் ரவீந்திரா மற்றும் டிம் சவுதி இருவரும் தனிப்பட்ட சாதனைகளை படைத்து தங்கள் அணியை பெரிய அளவில் முன்னிலை பெற வைத்திருக்கிறார்கள்.
இன்று இரண்டாவது நாள் போட்டி துவங்கியதும் உள்ளே வந்த நியூசிலாந்து அணி நான்கு விக்கெட்டுகளை மிக வேகமாக இழந்தது. இந்திய அணி இந்த போட்டிக்குள் வேகமாக உள்ளே வருவது போல் தெரிந்தது. இப்படியான நிலையில் இரச்சின் ரவீந்திரா மற்றும் டிம் சவுதி இருவரும் இணைந்து இந்திய அணியின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள்.
சொந்த ஊரில் சாதித்த ரச்சின் ரவீந்தரா
இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியின் இளம் இடதுகை பேட்ஸ்மேன் ரச்சின் ரவீந்திரநா ஆரம்பத்தில் பொறுமையாக ஆரம்பித்து கடைசி அரை மணி நேரத்தில் இந்திய பந்துவீச்சை நொறுக்கி தள்ளிவிட்டார். இன்று சிறப்பாக விளையாடிய அவர் சதம் அடித்து மதிய உணவு இடைவேளையில் ஆட்டம் இழக்காமல் 125 பந்துகளில் 104 ரன்கள் எடுத்திருக்கிறார்.
மேலும் 12 வருடங்கள் கழித்து இந்தியாவில் டெஸ்ட் சதம் அடித்த இரண்டாவது பேட்ஸ்மேனாக ரச்சின் ரவீந்தரா சாதனை படைத்தார். மேலும் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த 18 வது வீரராக மாறினார். பெங்களூரு இவர் பிறந்த இடம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில் இதே மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்தார்.
சேவாக்கை தாண்டி டிம் சவுதி சாதனை
இன்றைய போட்டியில் முதல் நான்கு விக்கெட்டை நியூசிலாந்து மிக வேகமாக இழந்ததும் ரச்சின் ரவீந்திராவுடன் இணைந்த டிம் சவுதி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இப்போது இவர் ஆட்டம் இழக்காமல் 49 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார். மேலும் ரச்சின் ரவீந்திராவுடன் இணைந்து 97 பந்துகளில் 112 பார்ட்னர்ஷிப் எட்டாவது விக்கெட்டுக்கு அமைக்க உதவினார்.
இதையும் படிங்க : இலங்கையில் ஆடினதுதான் உதவியது.. எனக்கு விராட் கோலி விக்கெட் கிடைத்தது இப்படிதான் – வில்லியம் ரூர்க் பேட்டி
மேலும் டிம் சவுதி இன்றைய போட்டியில் மூன்று சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இந்திய வீரர் வீரேந்தர் சேவாக்கை தாண்டினார். சேவாக் 104 டெஸ்ட் போட்டியில் 91 சிக்சர் அடித்திருக்கிறார். தற்போது டிம் சவுதி 102 டெஸ்ட் போட்டியில் 92 சித்தர்கள் அடித்து தாண்டி இருக்கிறார்.






