உலக கிரிக்கெட்

எங்க ஆட்டம் இனிமேல்தான் சூடு பிடிக்கும்.. அவர் திரும்ப வந்துட்டாரு.. ஒரு ரசிகனா இது மகிழ்ச்சி – டிம் சவுதி

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற 19ஆம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் இதற்காக நியூசிலாந்து அணி சிறப்பான முறையில் தயாராகி இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து முன்னாள் வீரரான டிம் சவுத்தீ நியூசிலாந்து அணி குறித்து சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

15 மாதம் கழித்து

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது. முன்னணி எட்டு அணிகள் பங்கேற்க உள்ள இந்த தொடரில் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் கூட அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது என்பது மிகவும் கடினமாகிவிடும். இந்த சூழ்நிலையில் தற்போது நடைபெற்ற முடிந்த பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒரு நாள் தொடரில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இந்த சூழ்நிலையில் 15 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நியூசிலாந்து அணிக்கு திரும்பிய கேன் வில்லியம்சன் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த தொடரில் ஒரு அரை சதம் 58 ரன்கள் மற்றும் ஒரு சதம் 133 ரன்கள் குவித்து மிகச் சிறந்த பேட்டிங் பார்மில் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரராக திகழ்ந்த டீம் சவுதி வில்லியம்சன் நியூசிலாந்து அணிக்கு சரியான நேரத்தில் திரும்பியிருப்பதாகவும் அவரது பேட்டிங் பார்ம் ஒரு ரசிகனாக எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

ஒரு ரசிகனாக எனக்கு மகிழ்ச்சி

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “கேன் வில்லியம்சன் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார். அவரை ஓரிரு நல்ல ஸ்கோர்களுடன் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வில்லியம்சன் தற்போது தரமான வீரராக இருக்கிறார். கடந்த சில வருடங்களாக அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமாக விளையாடவில்லை. ஆனால் அவர் திரும்பி வந்து இரண்டு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்வதை பார்த்து நாங்கள் பழகி விட்டோம்.

இதையும் படிங்க:என்னதான் சாம்பியனா இருந்தாலும்.. பாக் அணியின் இந்த பலவீனத்தை எப்போதும் மாற்ற முடியாது – இந்திய முன்னாள் வீரர்

ஆனால் பிளாக் கேப்சின் ஒரு ரசிகனாக எனக்கு பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர் நியூசிலாந்து அணியின் நடுப்பகுதியில் இருக்கும் போது அனுபவம் மற்றும் அவர் விளையாடும் விதத்தை பார்க்கும் போது ஆட்டம் முழு கட்டுப்பாட்டில் இருப்பது போன்றதாக இருக்கிறது” என்று பேசி இருக்கிறார். எனவே வில்லியம்சன் என்ற தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நியூசிலாந்து அணி கோப்பையை கைப்பற்ற மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

- Advertisement -
Published by