என்னதான் சாம்பியனா இருந்தாலும்.. பாக் அணியின் இந்த பலவீனத்தை எப்போதும் மாற்ற முடியாது – இந்திய முன்னாள் வீரர்

0
201

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில், தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா பாகிஸ்தான் அணியின் முக்கியமான பலவீனம் ஒன்றை எப்போதும் நிவர்த்தி செய்ய முடியாது என்று பரபரப்பான கருத்து ஒன்றைக் கூறி இருக்கிறார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் ட்ராபி தொடர்

கடந்த 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை மிகச் சிறப்பாக வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்த நிலையில் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தொடரை நடத்தும் வாய்ப்பை பாகிஸ்தான் அணி பெற்றுள்ளது. கடந்த சில வருடங்களாக கிரிக்கெட்டில் மோசமாக இருந்த பாகிஸ்தான் அணி தற்போது ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளை வீழ்த்தி பெரிய நம்பிக்கையை பெற்றுள்ளது.

இருப்பினும் பெரிய ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் அணி மோசமான தோல்விகளையே சந்தித்துள்ளது. 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பையில் லீக் சுற்றிலேயே வெளியேறிய பாகிஸ்தான் அணி, கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அமெரிக்கா போன்ற கத்துக் குட்டி அணிகளிடம் தோல்வி அடைந்து மோசமான விமர்சனங்களை சந்தித்தது. இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பாகிஸ்தான் அணி அழுத்தங்களின் கீழ் சிக்கிக் கொள்வதாக முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் பலவீனம்

இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் போது “பாகிஸ்தான் அணியின் பலவீனம் என்பது இன்றைய பலவீனம் கிடையாது. அது ஒரு நிரந்தர பலவீனமாகும். நிச்சயமாக அவர்கள் நடப்பு சாம்பியன்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் உண்மை என்னவென்றால் அவர்கள் அழுத்தத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். கடந்த டி20 உலக கோப்பையில் அமெரிக்க அணியிடம் தோல்வி அடைந்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

இதையும் படிங்க:ஐபிஎல் 2025.. வெளிவந்த முழு அட்டவணை.. சிஎஸ்கே விளையாடும் போட்டிகளின் தேதி இடம் அறிவிப்பு.. முழு விபரம்

2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அவர்கள் இறுதிப் போட்டியை எட்டியது உறுதி. ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி முற்றிலும் தவற விட்டது இது ஒரு அழுத்தத்தின் கீழ் இருக்கக்கூடிய அணியாகும். அவர்கள் அழுத்தத்தின் போது முற்றிலும் காணாமல் போகிறார்கள். எனவே அது பாகிஸ்தானின் பலவீனங்களில் ஒன்று என்பதை நிச்சயமாக ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -