இந்திய கிரிக்கெட்

122 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில்.. டிம் சவுத்தி படைத்த அபார சாதனை.. மோசமான பெருமைக்கு ஆளாகிய இந்திய அணி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி தற்போது பெங்களூரில் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான டிம் சவுதி 122 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சிறப்பான சாதனையை படைத்திருக்கிறார்.

46 ரன்னில் ஆல் அவுட் ஆன இந்தியா

பெங்களூரில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் நியூசிலாந்து அணியின் அபாரமான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 46 ரன்கள் மட்டுமே குவித்து ஆட்டம் இழந்தது. இதில் அதிகபட்சமாக இந்திய அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் பண்ட் மட்டுமே 20 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பிறகு களம் இறங்கிய நியூசிலாந்து அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை மேற்கொண்டு தனது முதல் இன்னிங்ஸில் 402 ரன்கள் குவித்தது. இதில் நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக மிடில் வரிசை பேட்ஸ்மேன் ரச்சின் ரவீந்திரா சிறப்பாக விளையாடி 157 பந்துகளில் 134 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு ஒன்பதாவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் வேகப்பந்து வீச்சாளருமான டிம் சவுத்தீ 73 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்சர் என 65 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

டிம் சவுத்தி படைத்த சாதனை

இதனால் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் குவித்தது. இந்த நிலையில் ஒன்பதாம் விக்கெட்டுக்கு களமிறங்கி 65 ரன்கள் குவித்த டிம் சவுதி 122 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எதிர் அணி குவித்த ரன்களை விட இரண்டாவது அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 45 ரன்கள் மட்டுமே குவித்த நிலையில் சவுத்தீ 65 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:விராட் சர்ப்ராஸ் இதை செய்யலனா.. ஜெய்ஸ்வால் மேல கண்டிப்பா கோவம் வரும்.. ஆனா இப்போ முடியாது – அஜய் ஜடேஜா பேட்டி

இதற்கு முன்னர் 1902ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ரெக்கீ டப் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்றாவது இன்னிங்ஸில் சதம் அடித்திருந்தார். அதற்கு முன்னர் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 61 ரன்கள் மட்டும் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மூன்றாவது இன்னிங்ஸ் விளையாடி வரும் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.

- Advertisement -
Published by

Recent Posts