இந்திய கிரிக்கெட்

இந்தியா எங்களை தவறு செய்ய வைத்து விட்டது.. எங்கள் தோல்விக்கு மிக முக்கிய காரணம் இதுதான் – சான்ட்னர் விளக்கம்

​நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்ற நிலையில், நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் போட்டி முடிந்த பிறகு இந்த தோல்வி குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

​இந்த போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பேசும்போது “பலம் வாய்ந்த அணிக்கு எதிராக விளையாடும் போது இதுபோன்ற நெருக்கமான முடிவுகள் வருவது இயல்பானதுதான். திலக், நமன் மற்றும் இறுதியில் ரெட்டி ஆகியோர் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். நாங்கள் அந்த நேரத்தில் கூடுதலாக ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தால் ஆட்டம் எங்கள் வசமாகியிருக்கும். அவர்கள் சேஸிங்கை கட்டுப்படுத்திய விதம் எங்களை இறுதியில் சில தவறுகளை செய்ய வைத்தது” என்று கூறி இருக்கிறார்.

​தொடர்ந்து பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் தவறுகள் குறித்து பேசிய அவர் “பவுலர்கள் பந்துவீசத் தொடங்கிய விதம் அற்புதமாக இருந்தது. 180 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பிறகு பவர் பிளேவில் அவர்கள் அதிரடியாக தொடங்கினால் தடுத்து நிறுத்துவது கடினம். நாங்கள் அவர்களை சிறப்பாக கட்டுப்படுத்தினோம். நடுவழியில் பிரேஸ்வெல் அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார். சில நோ-பால்கள் மற்றும் விக்கெட் விழும் தருவாயில் வீசப்பட்ட நோ-பால் போன்ற சிறு தவறுகள் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தின. கடந்த இரண்டு போட்டிகளிலும் திறமை அடிப்படையில் நாங்கள் நன்றாகவே செயல்பட்டோம். ஆனால் ஃபீல்டிங்கில் ஏற்பட்ட சில சின்ன தவறுதான் எங்களை தோற்கடித்தது” என்று கூறி இருக்கிறார்.

​மேலும் அணியின் பேட்டிங் பார்ட்னர்ஷிப் குறித்து பேசிய அவர் “கிளன் பிலிப்ஸ் நீண்ட காலமாக இதைச் செய்து வருகிறார், அதேபோல் பெவோன் ஜேக்கப்ஸும் சூழ்நிலைக்கு ஏற்ப அருமையாக விளையாடினார். நாங்கள் தொடக்கத்தில் 3 விக்கெட்டுகளை இழந்த பிறகு பார்ட்னர்ஷிப் அமைத்தோம். முதல் 10 ஓவர்களில் 60 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தோம். ஆனால் இந்த பிட்சில் சிறிது நேரம் நின்று விளையாடினால் பவர்பыலியை பயன்படுத்தி அடிக்கலாம். அவர்கள் இருவரும் நன்றாக விளையாடினார்கள். இறுதியில் பிரேஸ்வெல் 2 பந்துகளில் 10 ரன்கள் அடித்து அணியை 180 ரன்கள் ஸ்கோரை எட்ட வைத்தார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​இறுதியாக அணியின் காயங்கள் மற்றும் பிளேயிங் லெவன் மாற்றம் குறித்து அவர் கூறும்போது “மேட் ஹென்றியும், லாக்கி பெர்குசனும் மைதானத்தை விட்டு வெளியேறியது முன்னெச்சரிக்கை நடவடிக்காகத்தான். அவர்கள் இருவரும் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். இருப்பினும் இந்த தொடரில் போட்டிகள் மிகக் குறைந்த இடைவெளியில் இருப்பதால் அணியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts