விராட் சர்ப்ராஸ் இதை செய்யலனா.. ஜெய்ஸ்வால் மேல கண்டிப்பா கோவம் வரும்.. ஆனா இப்போ முடியாது – அஜய் ஜடேஜா பேட்டி

0
427

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. இன்னும் இரண்டு நாட்கள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் இந்திய அணிக்கு கைவசம் ஏழு விக்கெட்டுகள் இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில் இந்திய வீரர்கள் விளையாடிய விதம் குறித்து முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஆக்ரோஷமாக விளையாடும் இந்தியா

இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது நாளில் இந்திய அணி 46 ரன்கள் மட்டுமே குவித்து ஆட்டம் இழந்தது. அதற்குப் பிறகு நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவிக்க, அதற்குப் பின்னர் களம் இறங்கிய இந்தியா மூன்றாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் அதிரடியாக விளையாடி மூன்று விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்துள்ளது. 125 ரன்கள் பின் தங்கி உள்ள நிலையில் கைவசம் இன்னும் ஏழு விக்கட்டுகள் மட்டுமே உள்ளன.

இந்த சூழ்நிலையில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் 52 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்தபோது அடித்து விளையாட முயற்சித்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.இந்த சூழ்நிலையில் ஆக்ரோஷமாக விளையாடுவது இந்தியாவின் திட்டமாக இருக்கும் நிலையில் இக்கட்டான சூழ்நிலையில் ஜெய்ஸ்வால் ஆட்டம் இழந்த விதம் குறித்து கோபமடைய கூடாது என்று இந்தியாவின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கூறியிருக்கிறார்.

- Advertisement -

அவர் மீது கோபம் வேண்டாம்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஆக்ரோஷமாக விளையாடுவதை விடுத்து தற்காப்பு முறைக்குச் சென்று இருந்தால் இந்தியா வகுத்துள்ள திட்டங்களை தாண்டி நீங்கள் தவறு செய்து விட்டீர்கள் என்ற கோபம் வரும். ஆனால் ஜெஸ்வாலுக்குப் பிறகு களமிறங்கிய விராட் கோலி மற்றும் சர்ப்ராஸ்கான் ஆகியோர் விளையாடிய விதத்தைப் பார்த்தால் ஜெய்ஸ்வால் விளையாடிய முறை தவறில்லை என்று தான் தோன்றும்.

இதையும் படிங்க:2025 சாம்பியன்ஸ் டிராபி.. இந்தியா பங்கேற்க பாகிஸ்தான் கூறும் வினோத யோசனை.. இறுதி முடிவு பிசிசிஐ கையில்.. முழு விபரம்

ஜெய்ஸ்வால் ஷாட் தேர்வில் கோபப்பட முடியாது. அவர் 200 அல்லது 250 ரன்கள் அடித்த பிறகு இந்த முறையில் விளையாடாமல் போனால் உங்களுக்கு கோபம் வரலாம். இல்லையெனில் முதல் ஓவரிலேயே அந்த ஷாட் விளையாடி இருந்தால் அதன் நிலைமை வேறு. ஆனால் இந்திய அணியின் திட்டமாக இது இருக்கும்போது அவர் மேல் வருத்தம் அடைய முடியாது” என்று கூறி இருக்கிறார். இன்று நான்காவது நாள் ஆட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணி இதே போன்று நிலைத்து நின்று விளையாடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- Advertisement -