சர்வதேச ஓய்வு பெற்றிருந்தும்.. தோனியால் லெஜன்ட்ஸ் கிரிக்கெட் ஆட முடியாது.. காரணம் என்ன.?

0
21257

இந்திய முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் தற்போது உலக சாம்பியனஷிப் லீக் 2024 தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் இந்தியா சாம்பியன்ஸ் அணிக்காக யுவராஜ் சிங், ரெய்னா, உத்தப்பா போன்ற ஓய்வு பெற்ற வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் மற்றொரு ஜாம்பவான் கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனி இந்தத் தொடரில் இடம்பெறாதது ரசிகர்களிடையே கேள்வியை எழுப்பி இருக்கிறது.

- Advertisement -

முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடி வரும் உலக சாம்பியன்ஷிப் லீக் 2024 தொடரில் மொத்தமாக ஆறு நாடுகள் பங்கேற்றுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இடம் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் ஒவ்வொரு அணியிலும் ஓய்வு பெற்ற ஜாம்பவான் வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்திய அணியில் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், யூசுப் பதான் போன்ற முன்னாள் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வரும் வேளையில் மகேந்திர சிங் தோனி இடம்பெறவில்லை. 2020ம் ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்ற மகேந்திர சிங் தோனி தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் அவர் இந்த தொடரில் இடம் பெறாததற்கான காரணம், பிசிசிஐயின் விதிகளின்படி ஐபிஎல் தொடரில் விளையாடும் ஒரு வீரர் தனது ஓய்வினை அறிவிக்காமல் வேறு எந்த லீக் தொடரிலும் விளையாட முடியாது. வேறு ஏதாவது ஒரு தொடரில் அவர் விளையாட விரும்பினால் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரே இது போன்ற லீக்குகளில் விளையாட முடியும். மகேந்திரசிங் தோனி இந்த காரணத்தால்தான் தற்போது நடைபெற்று வரும் லெஜென்ஸ் தொடரில் பங்கேற்கவில்லை.

அப்படி அவர் ஒருவேளை பங்கேற்று விளையாடினால் ஐபிஎல் தொடரில் பங்கேற்று அதே நேரத்தில் அபுதாபி டி10 தொடரில் பங்கேற்று விளையாடிய பிரவீன் தாம்பே எதிர்கொண்ட பிரச்சனைகளை மகேந்திர சிங் தோனி சந்திக்க நேரிடும். இந்த காரணத்தால் தான் தோனி இந்த தொடரில் பங்கேற்காமல் இருக்கிறார். 2024 ஐபிஎல் தொடரோடு தோனி தனது ஓய்வினை அறிவித்து விடுவார் என்று அனைவரும் எதிர்பார்க்கும் வேளையில் இன்னும் அது குறித்து எந்த அறிவிப்பையும் தோனி வெளியிடவில்லை. இதனால் இந்த தொடரில் அவர் பங்கேற்க முடியாது.

இதையும் படிங்க:வெஸ்ட் இண்டீஸ் தொடர்… அணியை அறிவித்த தென் ஆப்பிரிக்கா.. உ.கோ பைனலில் சொதப்பிய வீரருக்கு இடமில்லை

அபுதாபி டி10 லீக்கில் விளையாடுவதற்காக 2018ம் ஆண்டு பிரவீன் தாம்பே ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு வாங்கினார். டி10 தொடரில் சிறப்பாக விளையாடிய தனது திறமையையும் நிரூபித்தார். இந்த சூழ்நிலையில் 2020ஆம் ஆண்டு தனது ஓய்வை திரும்ப வாபஸ் வாங்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை வாங்கி இருந்தது. இருப்பினும் அவர் அபுதாபி லீக்கில் விளையாடியதற்காக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -