ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டி20 போட்டி டார்வின் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஸ் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என ஏழு பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட் இரண்டு ரன்களிலும், ஜோஸ் இங்கிலீஷ் டக் அவுட் ஆனார். இதனால் ஆஸ்திரேலியாவில் 30 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
டிம் டேவிட் அதிரடி ஆட்டம்:
அப்போது கேமரான் கிரீன் அபாரமாக விளையாடி மூன்று சிக்சர் நான்கு பவுண்டரி என 13 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார்.எனினும் அவரும் ஆட்டம் இழந்த உடன் மேக்ஸ்வெல்,மிட்செல் ஓவன் 2 ரன்களிலும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இதனால் ஆஸ்திரேலிய அணி 75 ரன்கள் சேர்ப்பதற்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களத்தில் நின்று கொண்டிருந்த டிம் டேவிட் திடீரென்று ருத்ரதாண்டவம் ஆட்டம் ஆடினார்.தென்னாப்பிரிக்கா வீரர்களின் பந்து வீச்சில் சிக்சர் பவுண்டரி என அவர் பறக்க விட்டார்.
தென்னாப்பிரிக்க பந்துவீச்சு:
இதனால் 29 பந்துகளில் டிம் டேவிட் அரைசதம் அடிக்க தொடர்ந்து அதிரடி காட்டி 52 பந்துகளில் 83 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு பவுண்டரிகளும் எட்டு சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 178 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையும் படிங்க: உன்ன டீம்ல இருந்து தூக்கிடுவேன்.. ஆனா அதுக்கு அது நடக்கணும்னு கம்பீர் சொன்னார் – சஞ்சு சாம்சன் பேச்சு
இறுதியில் நாதன் எல்லீஸ் 12 ரன்களிலும் எடுத்திருந்தனர். தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு தரப்பில் மக்கப்பா நான்கு ஓவர்கள் வீசி 20 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு வீக்கெட்டுகளை கைப்பற்றினார்.இதேபோன்று தமிழக வீரர் சேதுரான் முத்துசாமி நான்கு ஓவர்கள் வீசி 24 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். ரபாடா நான்கு ஓவர்கள் வீசி 29 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.






