நான் இந்திய அணிக்கு அறிமுகமானது ஹர்திக் கேப்டன்சியில்தான்.. எனக்கு அறிவிருக்கு – திலக் வர்மா பேட்டி

0
191
Tilak

நடப்பு 17ஆவது ஐபிஎல் சீசனில் இன்று இரவு மிக முக்கியமான போட்டி நடக்க இருக்கிறது. குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா மற்றும் ரோகித் சர்மா இருவருக்கு இடையேயான தொடர்பு எப்படி இருக்கும்? மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியை விட்டுச் சென்ற ஹர்திக் பாண்டியாவுக்கு குஜராத் மைதானத்தில் எப்படியான வரவேற்பு இருக்கும்? என்பது குறித்தான நிறைய எதிர்பார்ப்புகள் நிலவுகிறது.

தற்பொழுது மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் சூரியகுமார் யாதவ் காயம் சரியாக கொஞ்சம் நேரம் எடுப்பதால், அவர் முதல் நான்கு ஐந்து போட்டிகளுக்கு கிடைக்க மாட்டார் என்று தெரிகிறது. எனவே அவருடைய இடத்தில் தென் ஆப்பிரிக்க இளம் வீரர் குட்டி ஏபி டிவில்லியர்ஸ் விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது.

- Advertisement -

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் தற்பொழுது சூரியகுமார் விளையாடாவிட்டால் கூட அந்த அணி மிகவும் வலிமையானதாக தெரிகிறது. அந்த அணிக்கு எட்டாவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் ரொமாரியோ செப்பர்ட் வருகின்ற மாதிரி பிளேயிங் லெவன் இருக்கிறது. எனவே பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வெல்வதற்கான எல்லா பலத்தோடும் இருக்கிறது.

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திர வீரராக உருவாகி வரும் திலக் வர்மா பேசும் பொழுது “ரோஹித் பாய் மற்றும் ஹர்திக் பாய் என இருவருமே எங்கள் அணிக்காகவே இருந்திருக்கிறார்கள். நாங்கள் அடிப்படைகளைப் பின்பற்றி விளையாடினால் போதும். வியூகங்கள் ரீதியாக நாங்கள் மிகவும் பலமாக இருக்கிறோம். நாங்கள் புதிதாக எதையும் செய்ய தேவையில்லை.

நான் இந்திய அணிக்காக ஹர்திக் பாண்டியா பாய் தலைமையில்தான் அறிமுகமானேன். எனவே எனக்கு எல்லாம் நல்ல முறையில் இருக்கிறது. ரோகித் பாய் எப்பொழுதும் எங்களுடைய அணிக்காகத்தான் இருக்கிறார். நாங்கள் எப்பொழுதும் ஒரு அணியாக ஒன்றிணைகிறோம். பும்ரா மிகவும் அனுபவம் வாய்ந்த உலகின் முதல் நிலை பந்துவீச்சாளர். அவர் இளைஞர்களுக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கக் கூடியவர். அவர்அழுத்தமான நேரத்திலும் அமைதியாக இருப்பது அவர் எல்லாவற்றிலுமே அனுபவம் வாய்ந்தவர் என்று சொல்ல வைக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : அறுந்து விழுந்த ஸ்பைடர் கேமரா கம்பி.. நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி.. அதிர்ஷ்டவசமாக வீரர்கள் தப்பினார்கள்

கடந்த ஆண்டு எனக்கு ஒரு நல்ல ஐபிஎல் சீசன் அமைந்தது. மேலும் நான் இந்திய அணிக்கு அறிமுகமாகி விளையாடிவிட்டதால், என்னை ஒரு மூத்த வீரராக நான் நினைக்கிறேன். எனக்கு கிரிக்கெட் குறித்த அறிவு இருக்கிறது. எனவே நான் இந்த முறை அணிக்காக பொறுப்புடன் விளையாட வேண்டும். எனக்கு பொதுவாக பேட்டிங்கில் நல்ல தொடக்கம் கிடைக்கிறது. நான் எப்பொழுதும் ஆட்டத்தை முடிக்க விரும்புகிறேன். இந்த ஐபிஎல் சீசனில் அதை செய்ய விரும்புகிறேன். மேலும் இந்த வருடம் ஐபிஎல் கோப்பையை வெல்வது என்னுடைய இலக்கு” என்று கூறி இருக்கிறார்.