இந்திய அணியின் இளம் வீரர் திலக் வருமா பயிற்சியாளர் கம்பீர் மற்றும் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா தனது வளர்ச்சியில் எவ்வாறு உதவுகிறார்கள்? என்பது குறித்து பேட்டி அளித்திருக்கிறார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று கோட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் திலக் வர்மாவுக்கு 15 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் தான் மூன்று வடிவ கிரிக்கெட்டும் விளையாட விரும்புவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
கம்பீர் தரும் அழுத்தம்
திலக் வர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமான இரண்டாவது வருடத்திலேயே அப்போதைய கேப்டன் ரோஹித் சர்மா அவரை எல்லா வடிவ இந்திய கிரிக்கெட் அணிகளும் பார்க்க முடியும் என்று கூறுகிறார். தானாக பொறுப்பு எடுத்துக் கொண்டு விளையாடி அணியை வெற்றி பெற வைப்பதில் திலக் வர்மா விராட் கோலி போல விளையாட கூடியவர். ஆசியக் கோப்பை இறுதி போட்டியிலும் அதைச் செய்து காட்டி இருந்தார்.
இதுகுறித்து பேசி உள்ள திலக் வர்மா கூறும் பொழுது “கம்பீர் சார் எனக்கு நம்பிக்கை தருகிறார். திறமை இருந்தால் எல்லா வடிவத்திலும் நாம் விளையாட முடியும் என அவர் தொடர்ந்து என்னிடம் கூறி வருகிறார். போட்டிகளில் எவ்வாறு அழுத்தத்தை கையாள்வது என்று கற்றுக் கொள்வதற்காக பயிற்சியில் என்னை அவர் அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறார். என்னிடம் திறமை இருக்கிறது என்று அவர் நம்புவதால் அவர் எனக்கு சவால்களை கொடுக்கிறார். அவருடைய ஆதரவு எனக்கு மிகவும் முக்கியம்”
விராட் பாயிடம் கற்றுக் கொள்கிறேன்
“விராட் பாய் மற்றும் ரோஹித் பாய் இருவரும் ஒரே அணியில் இருக்கும் பொழுது நம்முடைய நம்பிக்கை மிகப்பெரிய அளவுக்கு மாறும். அவர்களிடம் நிறைய அனுபவமும் நிறைய அறிவும் இருக்கிறது. நான் முடிந்த வரை அவர்களிடம் இருந்து அதை கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறேன்”
இதையும் படிங்க: மனதை மாற்றிக் கொண்ட விராட் கோலி.. 15 வருடங்களுக்கு பிறகு அரிய சம்பவம்.. பெங்களூரில் புது வரலாறு
“நான் விராட் பாயிடம் நிறைய பேசுகிறேன். குறிப்பாக உடற்பயிற்சி மற்றும் விக்கெட்டுகளுக்கு இடையில் வேகமாக ஓடுவது குறித்து பேசுகிறேன். அவருடைய தீவிரம் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கும். எனக்கும் ஓடுவது மிகவும் பிடிக்கும். நான் இதை மிகவும் ரசிக்கிறேன். மேலும் அவருடன் இணைந்து விளையாடி ரன் ஓட வேண்டும் என்பது என்னுடைய ஆசை” என்று கூறியிருக்கிறார்.






