கடைசியா சாகல் பாய் என் கையில மாட்டிக்கிட்டாரு.. ஆனா நான் என் கோச் கிட்ட சொன்னது வேற – திலக் வருமா பேட்டி

0
51
Tilak

நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் திலக் வர்மா அதிரடி பேட்டிங் மும்பை வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. இந்த போட்டியில் தன்னுடைய பேட்டிங் திட்டம் குறித்து அவர் பேசியிருக்கிறார்.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 8 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய மும்பைக்கு திலக் வர்மா 33 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 75 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து வைத்தார்.

- Advertisement -

சாகலிடம் ஆரம்பித்த அதிரடி

இந்தப் போட்டியில் இரண்டாவது டைம் அவுட்டுக்கு பிறகு பந்து வீச வந்த சாகல் ஓவரில் ஒட்டுமொத்தமாக 21 ரன்கள் எடுத்தார்கள். அங்கிருந்து ஒவ்வொரு ஓவரிலும் அதிரடியாக விளையாடி போட்டியை மும்பை பக்கம் கொண்டு வந்த திலக் வருமா இறுதியில் வெற்றி பெற வைத்தார்.

மேலும் மெதுவாக விளையாடிய ரூதர்போர்டு ஆட்டம் இழந்ததும் உள்ளே வந்த வில் ஜேக்ஸ் அதிரடி திலக் வர்மாவுக்கு உதவியாக இருந்ததோடு மும்பை வெற்றி பெறவும் முக்கிய காரணமாக இருந்தது. அவர் 10 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சாகல் பாய் சிக்கிக்கொண்டார்

இது குறித்து திலக் வர்மா பேசும் போது “நான் உலகக் கோப்பைக்கு முன்பிருந்தே போட்டியை முடித்து வைப்பதை விரும்புகிறேன் என்று கூறி வருகிறேன். நேற்றும் அதைத்தான் செய்தேன். இரண்டாவது டைம் அவுட்டுக்கு பிறகு எனது கோச்சிடம் ஒரு பெரிய ஓவர் வந்தால் வெற்றி பெற்று விடலாம் என்னை நம்புங்கள் என்று சொன்னேன். துரதிஷ்டவசமாக அப்போது என் கையில் சாகல் பாய் வந்து மாட்டிக்கொண்டார்”

இதையும் படிங்க : கேப்டனா முதல் போட்டியை ஜெயிச்சுட்டேன்.. என்ன நடந்தாலும் இதை செய்யக்கூடாதுனு முடிவுல இருந்தேன் – பும்ரா பேட்டி

“இந்த ஆடுகளத்தில் பந்து தாழ்வாகவும் மெதுவாகவும் வர ஆரம்பித்தது. எனவே வேகமாக வீசினால் சுலபமாக சிக்ஸர் அடிக்கலாம், இதனால் மெதுவான பந்துக்காக மட்டுமே காத்திருங்கள் என வில் ஜாக்சிடம் சொன்னேன். அவருடைய இந்த பங்களிப்பு மிகவும் அற்புதமாக இருந்தது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -