4 விக்கெட் போனாலும் இப்படித்தான் ஆடுவோம்.. எதிரணிக்கு ஒரு விஷயத்தை காட்ட முடிவு செய்தோம் – திலக் வர்மா பேட்டி

0
13
Tilak

நேற்று ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் திலக் வர்மா பேட்டிங் வரிசையில் ஆறாவது இடத்தில் வந்து 16 பந்துகளில் 44 ரன்கள் அதிரடியாக குவித்தார். தன்னுடைய இடம் மாற்றப்பட்டு இருப்பது குறித்து திலக் வர்மா பேசியிருக்கிறார்.

இந்த உலகக் கோப்பை தொடரில் அவர் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் களம் இறங்கி வந்தார். ஆனால் அவர் மெதுவாக விளையாடியதால் அடுத்து வரக்கூடியவர்களுக்கு அழுத்தம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவர் நீக்கப்படலாம் என்று கூட எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

நான்கு ஆண்டுகளாக பழக்கம்

இந்த நிலையில் நேற்று பேட்டிங் வரிசையில் ஆறாவது இடத்தில் வந்திருந்த போதும் திலக் வருமா முதல் பந்தில் இருந்து அதிரடியாக விளையாடினார். அவர் 16 பந்தில் 44 ரன்கள் எடுத்த காரணத்தினால் இந்திய அணி 250 ரன்கள் தாண்டி எடுக்க முடிந்தது.

இதுகுறித்து திலக் வர்மா பேசும் பொழுது “நான் எப்போதும் சொல்வேன், என் அணிக்கு என்ன தேவையோ அதை செய்ய நான் தயாராக இருக்கிறேன். கடந்த நான்கு வருடங்களாக நான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தேவைக்கு தகுந்தபடி பல இடங்களில் களம் இறங்கி விளையாடி உள்ளேன். சில போட்டிகளில் இந்திய அணிக்காகவும் இதை செய்திருக்கிறேன். அணிக்கு என்ன தேவைப்பட்டாலும் அதை செய்ய நான் தயாராக உள்ளேன்”

- Advertisement -

இதைத்தான் கேட்டுக் கொண்டிருந்தேன்

“சூழ்நிலைக்கு ஏற்ப என்னை பார்த்துக் கொண்டு என்னால் விளையாட முடியும். ஆனால் இப்படி ஒரு இன்னிங்ஸ் வேண்டும் என்றுதான் நான் கடவுளிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். இப்போது நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நான் அடுத்த போட்டிகளில் எனது அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்க முடியும்”

இதையும் படிங்க : அபிஷேக் செய்த ஒரே தப்பு இதுதான்.. அவர்கிட்ட யாராவது பேசினால் இதை செய்ய சொல்லுங்க – அஸ்வின் அறிவுரை

“சஞ்சு சாம்சன் உள்ளே வந்து அதிரடியாக ஆரம்பித்தார் நாங்கள் தொடர்ந்து அதையே செய்தோம். மேலும் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் பவர் பிளேவில் மூன்று நான்கு விக்கெட் விழுந்து இருந்தாலும், நாங்கள் அதிரடியாகவே பேட்டிங் செய்ய வேண்டும் என்று பேசிக்கொண்டோம். அதைத்தான் இன்று செயல்படுத்த முயற்சி செய்தோம். நாங்கள் ஒவ்வொரு பந்தையும் அடிக்க தயாராக இருக்கிறோம் என்று எதிரணிக்கு காட்ட நினைக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -