நேற்று அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில் அவர் பேட்டிங் எப்படி இருந்தது? என்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.
நடப்பு உலக கோப்பை தொடர் இதுவரையில் மறக்க வேண்டிய ஒன்றாக அபிஷேக் ஷர்மாவுக்கு அமைந்திருக்கிறது. தொடர்ந்து மூன்று டக் அவுட் ஆன அவர் இன்னும் தன்னுடைய சரளமான பேட்டிங்கை கண்டுபிடிக்கவில்லை என்பதுதான் உண்மை.
அமீர் விமர்சனம்
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் அபிஷேக் ஷர்மா காற்றில் பேட்டை வேகமாக சுற்றக்கூடிய வெறும் ஸ்லாகர் என்கின்ற வகையில் பேசி இருந்தார். ஆனால் பிறகு தன் கருத்துக்கு விளக்கம் கொடுத்து பந்துக்கு தகுந்த வகையில் அபிஷேக் ஷர்மா விளையாட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அபிஷேக் ஷர்மா பேட்டிங் குறித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் அவரை ஸ்லாகர் என்று கூறுவது தவறு என்று கூறியதோடு அபிஷேக் ஷர்மா தொடர்ந்து என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து அறிவுரையும் கொடுத்திருக்கிறார்.
இதைத்தான் செய்ய வேண்டும்
இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “அபிஷேக் சர்மாவுக்கு யுவராஜ் சிங்கை விட பேட் ஸ்விங் திறமை மிகவும் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாகவே அவர் பந்தை அடிக்கும் பொழுது வெகு தூரத்திற்கு சென்று விழுகிறது. ஆனால் மக்கள் அவரை அதிக சக்தி கொடுத்து அடிக்கக்கூடிய ஸ்லாகர் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அபிஷேக் ஷர்மா செய்த ஒரே தவறு அவர் எல்லா பந்தையும் அடிக்க நினைத்ததுதான்”
இதையும் படிங்க : எப்படி ரன் அடிக்கிறதுன்னு மேட்ச் நடுவுல தான் கண்டுபிடிச்சேன்.. இனி என்கிட்ட ரன் வரும் – ஹர்திக் பாண்டியா பேட்டி
“அபிஷேக் ஷர்மா தனது ஷாட்டில் அதிக சக்தியை கொடுக்க தேவையில்லை என்று யாராவது அவரிடம் பேசுவார்கள் என்றால், நீங்கள் அவரிடம் சொல்ல வேண்டியது பந்தை டைம் செய்து மட்டும் விளையாடுங்கள் போதும் என்றுதான். இதை செய்தாலே பிரச்சினை தீர்ந்து விடும்” என்று கூறி இருக்கிறார்.






