இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் திலக் வர்மா தானும் இந்திய அணியும் டி20 உலக கோப்பைக்கு தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்ட இரண்டு அமைப்புகளுக்கு தான் நன்றி சொல்லிக் கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.
டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக உள்நாட்டில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் திலக் வர்மா காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் இடம்பெறவில்லை. ஆனால் அதிலிருந்து மிக வேகமாக முயற்சி அடைந்து இந்திய டி20 உலகக் கோப்பை அணிக்கு திரும்பி இருக்கிறார்.
தற்போது டி20 உலக கோப்பை தொடரில் திலக் வர்மா மூன்றாவது இடத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்வது உறுதியாக இருக்கிறது. இது பல காலமாக விராட் கோலி பொறுப்பு எடுத்து வெற்றிகரமாக செய்து வந்த இடமாகும். எனவே இயல்பாகவே திலக் வர்மாவுக்கு அழுத்தம் உருவாகிறது.
அதே நேரத்தில் நேற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் சிறப்பாக விளையாடி 18 பந்தில் அதிரடியாக 45 ரன்கள் எடுத்தார். காயத்திலிருந்து திரும்பி வந்த பிறகு அவருடைய பேட்டிங் எந்த விதத்திலும் மாறவில்லை. அவர் விரும்பும் வகையில் பேட்டிங் செய்ய முடிகிறது.
இதுகுறித்து திலக் வர்மா பேசும் பொழுது “நான் இவ்வளவு சீக்கிரம் களம் இறங்குவேன் என்று நினைக்கவில்லை. இதற்காக பிசிசிஐ மற்றும் என்சிஏ இருவருக்கும் என்னுடைய நன்றிகள். உலகக் கோப்பையில் விளையாடுவது என்னுடைய கனவு என்று நான் எப்பொழுதும் சொல்லி இருக்கிறேன். நான் நேற்று விளையாட உள்ளே வந்ததும் என் பெயரை சொல்லி ரசிகர்கள் கத்தினார்கள். அது எனக்கு மிகவும் நன்றாக ஊக்கமளிப்பதாக இருந்தது”
இதையும் படிங்க : வாஷிங்டன் சுந்தர் தேவையே இல்லை.. 13 நாட்கள் தாண்டிட்டா போதும்.. இதுதான் முக்கியம் – சஞ்சை பாங்கர் கருத்து
“இஷானும் அபிஷேக் ஷர்மாவும் அதிரடியாக பேட்டிங் செய்து கொண்டு இருந்தார்கள். எனவே நான் உள்ளே சென்றதும் அவர்களைப் போலவே அதிரடியாக விளையாட வேண்டும் என்று முடிவு செய்தேன். அதே சமயத்தில் ஒரு பயிற்சி போட்டிக்கு மைதானம் நிறைய ரசிகர்கள் வந்தது எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. சூழ்நிலையை அற்புதமாக மாற்றினார்கள். மேலும் நானும் இந்திய அணியும் டி20 உலகக் கோப்பைக்கு தயார் என்று கூறி இருக்கிறார்.