வாஷிங்டன் சுந்தர் தேவையே இல்லை.. 13 நாட்கள் தாண்டிட்டா போதும்.. இதுதான் முக்கியம் – சஞ்சை பாங்கர் கருத்து

0
5
Sanjay

தற்போது காயத்தின் காரணமாக இந்திய டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பெற முடியாமல் இருக்கும் வாஷிங்டன் சுந்தர் குறித்து இந்திய முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் பேசியிருக்கிறார்

திலக் வர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற்றாலும் கூட காயத்தின் காரணமாக வெளியில் இருந்தார்கள். இந்த நிலையில் காயம் குணமடைந்து திலக் வர்மா மீண்டும் திரும்பி வந்துவிட்டார். ஆனால் வாஷிங்டன் சுந்தர் இன்னும் அணிக்கு வரவில்லை.

- Advertisement -

அவர் உடனடி தேவை இல்லை

மேலும் அவர் பயிற்சியில் இன்னும் பந்துவீச்சை ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அவர் மீண்டும் எப்போது அணிக்கு கிடைப்பார் என்பதில் ஒரு பெரிய குழப்பம் காணப்படுகிறது. ஒருவேளை அவர் கிடைக்காவிட்டால் அது பின்னடைவை உருவாக்குமா? என்று கேள்வி இருக்கிறது.

இது குறித்து சஞ்சய் பாங்கர் பேசும் பொழுது “வாஷிங்டன் சுந்தர் இப்பொழுது உடனடியாக இந்திய அணிக்கு தேவைப்படவில்லை. தற்போது உங்களிடம் சிறந்த சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் இருக்கிறார்கள். அங்கு அக்சர் கடையில் முதலிடத்தில் இருக்கிறார் இதற்கு அடுத்து உங்களுக்கு திலக் வர்மாவும் இருக்கிறார்”

- Advertisement -

13 நாட்கள் இருக்கிறது

“இந்த டி20 உலக கோப்பையில் முதல் 13 நாட்களில் முதல் சுற்று போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த காலகட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்கு பெரிய அளவில் தேவைப்பட மாட்டார். இரண்டாவது சுற்றில்தான் அவருடைய தேவை இருக்கும். அதுவும் எதிரணியில் இடது கை வீரர்கள் அதிகம் இருக்க வேண்டும். மேலும் ஆடுகளமும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்க வேண்டும்”

இதையும் படிங்க : பிப்ரவரி 7ஆம் தேதி சாம்சனை பார்க்க முடியாது.. அவர் ஆடுவது திலக் கையில் தான் இருக்கு – சுனில் கவாஸ்கர் விமர்சனம்

“ஒருவேளை அவர் இரண்டாவது சுற்று கிடைக்காமல் அரைஇறுதிக்கு தான் கிடைப்பார் என்றால் அவ்வளவு தூரம் நான் செல்ல மாட்டேன். அவருக்கு பதிலாக நாம் வேறு மாற்றுவீரரை தேடி விடலாம். மேலும் வாஷிங்டன் சுந்தர் தேவை இந்திய அணிக்கு மிகவும் குறைவாகவே இருக்கிறது. அவர் பிளேயிங் லெவனில் கட்டாயம் இடம் பெறக்கூடிய வீரர் இல்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -