இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இரண்டு போட்டிகளை வென்று தொடரில் முன்னிலை பெற்று இருந்தது.
இந்த நிலையில் இன்று இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான மூன்றாவது போட்டி இரண்டாவது போட்டி நடந்த கயானா மைதானத்தில் நடந்தது. இந்திய அணியின் தரப்பில் ஜெய்ஸ்வால் அறிமுகமானார்.
முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரா
ண்டன் கிங் 42, கேப்டன் ரோமன் பவல் 40* ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் சேர்த்தது. குல்தீப் யாதவ் 28 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 1 ரன்னிலும் சுக்மன் கில் 6 ரன்னிலும் வெளியேறினார்கள். இதற்கடுத்து ஜோடி சேர்ந்த சூரியகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஜோடி அதிரடியில் மிரட்டியது. சூரியகுமார் யாதவ் 83 ரன்கள், திலக் வர்மா ஆட்டம் இழக்காமல் 49 ரன்கள் எடுக்க இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் நீடிக்கிறது.
வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளே வந்த சூரியகுமார் முதல் பந்தில் பவுண்டரி மற்றும் இரண்டாவது பந்தில் சிக்ஸர் அடித்து ஆரம்பித்தார். மேலும் முக்கியமான இந்த போட்டியில், மிகச் சரியான தாக்குதலை கொடுத்து பத்து பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 44 பந்துகளில் 83 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்றார்.
போட்டிக்கு பிறகு பேசிய சூர்யா குமார் யாதவ் ” பவர் பிளேவில் நான் நானாக இருப்பது முக்கியம். நான் முடிந்தவரை அதிகம் பேக் செய்ய வேண்டும் என்று டீம் விரும்பியது. நான் பின்புறம் விளையாடும் ஷாட்களை மிக அதிகம் பயிற்சி செய்கிறேன். நான் அதை விரும்பி விளையாடுகிறேன். நான் என்னை வெளிப்படுத்த விரும்புகிறேன்.
நானும் திலக் வமாவும் சில காலமாக பேட்டிங் செய்கிறோம். நாங்கள் இருவரும் ஒருவர் ஒருவரை புரிந்து வைத்திருக்கிறோம். இன்று பேட்டிங் மிகவும் முதிர்ச்சியுடன் இருந்தது. திலக் மிக நம்பிக்கையுடன் பேட்டிங் செய்தார். அது எனக்கு நன்றாக பேட் செய்ய உதவியது. இன்று அணி கூட்டத்தில் பேசும்பொழுது யாராவது ஒருவர் கையை உயர்த்தி விளையாடி அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேப்டன் பேசினார். தாங்கள் அதைச் செய்தோம்” என்று கூறியிருக்கிறார்!
இந்த வெற்றியின் மூலம் தற்பொழுது இந்தத் தொடர் இரண்டுக்கு ஒன்று என இருக்கிறது. இந்திய அணி தொடரை தக்க வைக்க வேண்டும் என்றால் அடுத்த போட்டியிலும் செல்ல வேண்டும். அடுத்த இரண்டு போட்டிகளும் அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் நடக்கிறது.