ஆர்ச்சர் பந்துவீச்சை குறி வைத்து அடித்தேன்.. அதுக்கு பின்னாடி இந்த காரணம் இருக்கு – திலக் வர்மா விளக்கம்

0
1408
Tilak

நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் கடைசி நேரத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சை குறி வைத்து அடித்தது ஏன் என திலக் வர்மா விளக்கம் அளித்து பேசி இருக்கிறார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 55 பந்து விளையாடி மொத்தம் 72 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் திலக் வர்மா இந்திய அணியை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

ஆர்ச்சர்க்கு திலக் வர்மா வைத்த குறி

நேற்றைய போட்டியில் இந்திய அணிக்கு கைவசம் 3 விக்கெட்டுகள் மட்டுமே இருந்த நிலையில் கடைசி நேரத்தில் ஆர்ச்சர் பந்துவீச்சுக்கு வந்தார். மேலும் இரண்டு போட்டிகளாக ஆர்ச்சர் பந்துவீச்சு சிறப்பாக இருந்து வருகிறது. மேலும் அது அவருக்கு கடைசி ஓவராகவும் அமைந்திருந்தது. குறிப்பிட்ட அந்த ஓவர் இந்திய அணிக்கு ரன் அழுத்தத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இப்படியான நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் திலக் வர்மா ஆர்ச்சர் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்து ஆச்சரியப்படுத்தினார். அந்த இடத்திலேயே போட்டி இந்தியா பக்கம் நல்ல வகையில் திரும்பியது. தற்போது ஏன் தான் ஆர்ச்சரை குறி வைத்து அடித்தேன்? என்பது குறித்து விளக்கம் அளித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஆர்ச்சர் பந்துவீச்சை அடிக்க இதுவே காரணம்

இது குறித்து பேசி இருக்கும் திலக் வர்மா கூறும் பொழுது “நான் அவர்களின் சிறந்த பந்துவீச்சாளரை குறி வைக்க விரும்பினேன். நீங்கள் அவர்களுடைய சிறந்த பந்துவீச்சாளரை ரன்னுக்கு அடித்தால் மற்ற பந்துவீச்சாளர்கள் தானாக அழுத்தத்திற்கு உள்ளார்கள். எனவே விக்கெட் விழும் பொழுது நான் எதிரணியின் சிறந்த பந்துவீச்சாளரை அடித்து விளையாட நினைக்கிறேன்”

இதையும் படிங்க: 12 ஃபோர்ஸ்.. 5 சிக்ஸ்.. சிஎஸ்கே வீரர் விஜய் சங்கர் அபார ஆட்டம்.. சண்டீகரை வீழ்த்திய தமிழக அணி.. ரஞ்சி கோப்பை 2025

“மேலும் இப்படி செய்வதால் என் உடன் இருக்கும் பேட்ஸ்மேனுக்கும் எளிதாக விஷயங்கள் மாறும். நான் என்னை நம்பி விளையாடி ஆர்ச்சருக்கு எதிராக வாய்ப்புகளை பெற்றேன். நான் அவருக்கு எதிராக முன்கூட்டியே திட்டமிட்டு அப்படி விளையாடி இருந்தாலும் கூட, நான் இதற்காக வலையில் தனியாக பயிற்சி செய்தேன். இதன் காரணமாக மனதளவில் நான் தயாராக இருந்தேன். இதனால் எனக்கு நல்ல பலன் கிடைத்தது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -