“தம்பிங்களா எச்சரிக்கையா இருங்க.. ஆஸி எப்படிப்பட்டவங்க தெரியுமா?” – கவாஸ்கர் இந்திய அணிக்கு முக்கிய எச்சரிக்கை!

0
1547
Gavaskar

இந்தியாவில் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் கிரிக்கெட் திருவிழா நடைபெற்று வருகிறது.

இதுவரை நடைபெற்றுள்ள 12 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களில், நடப்பு உலகக் கோப்பை தொடர் வருமானம் மற்றும் பார்வையாளர்களை மைதானத்திற்கு கொண்டு வந்தது மற்றும் கவர்ந்தது என்ற அடிப்படையில் எல்லா வகையிலும் முன்னிலையில் இருக்கிறது.

- Advertisement -

இந்தியாவில் கிரிக்கெட் எப்பொழுதும் தோல்வி அடையாது என்பதற்கு சான்றாக, நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியடைந்து நிரூபித்திருக்கிறது.

இந்த உலகக் கோப்பை தொடரை மேலும் வெற்றி அடைய வைக்கும் விதமாக, தொடரை நடத்தும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. குறிப்பாக இதுவரையில் விளையாடிய பத்து அணிகளில் இந்திய அணியின் செயல்பாடு உச்சத்தில் இருக்கிறது.

அதே சமயத்தில் இந்திய அணிக்கு இறுதிப் போட்டியில் சரியான சவாலை கொடுக்க கூடிய, ஐந்து முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா வந்திருக்கிறது.

- Advertisement -

எனவே நடப்பு ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இறுதிப்போட்டி வரையில் தன்னுடைய பிரமாண்ட வெற்றியை விஸ்தரித்து சென்றுதான் முடிய இருக்கிறது. நான்கு வருடங்கள் கழித்து தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்த அளவிற்கு வெற்றி பெறுமா? என்றால் அது சந்தேகம்தான்.

இந்த நிலையில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி குறித்து பேசி உள்ள கவாஸ்கர் கூறும் பொழுது “நிச்சயமாக சிறந்த இரண்டு அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடுகின்றன. இந்தியா லீக் சுற்றில் ஒன்பது போட்டிகளிலும் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா முதல் இரண்டு போட்டிகளில் தடுமாறினாலும் பின்பு அவர்களுடைய பாணியில் திரும்ப வந்து எட்டு போட்டிகளை வென்றது.

இந்தியா விளையாடிய விதத்தில் இந்த உலகக் கோப்பையில் மிகவும் ஃபேவரைட் ஆக இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியா அவர்களை ஒருபோதும் நம்மால் புறக்கணிக்கவே முடியாது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மேக்ஸ்வெல் எப்படி விளையாடினார் என்று நாம் பார்த்தோம்.

அவர்கள் ஒருபோதும் விட்டுத் தரவே மாட்டார்கள். அவர்கள் தங்கள் நாட்டின் மேல் கொண்டிருக்கும் நேசத்தால், ஏதாவது செய்து போட்டியை வென்று, தங்கள் நாட்டுக்கு பெருமை சேர்ப்பதற்கு கடுமையாக போராடக் கூடியவர்கள். ஆஸ்திரேலியாவை பொருத்தவரை அவர்களை நம்மால் விலக்கி வைக்கவே முடியாது!” என்று இந்திய அணிக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார்!