இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் கேப்டன்சி மிகவும் மந்தமாக இருந்தது என்று ஆகாஷ் சோப்ரா விமர்சனம் செய்திருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணியின் பேட்டிங் யூனிட் மிக மோசமான முறையில் விளையாடியிருந்தது. இந்த நிலையில் ரோகித் சர்மாவின் கேப்டன்சியும் மோசமாக இருந்தது என தற்போது முன்னாள் வீரர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
தந்திரத்தை தவறவிட்ட ரோகித் சர்மா
2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியிடமிருந்து ஆட்டம் ஆஸ்திரேலியா பக்கம் செல்வதற்கு ஹெட் அதிரடியாக அடித்த சதம் முக்கிய காரணமாக இருந்தது. அந்த போட்டியில் அவரது பலவீனமான ஷார்ட் பந்துகளை கேப்டன் ரோகித் சர்மா பயன்படுத்தவே இல்லை.
நேற்று முன்தினம் இந்திய அணிக்கு எதிராக டிராவிஸ் ஹெட் சதம் அடித்தது இரண்டாவது போட்டியை தோற்க முக்கிய காரணமாக அமைந்தது. இந்த போட்டியிலும் ரோகித் சர்மா ஹெட் பலவீனமான ஷார்ட் பந்துகளை பந்து வீச்சாளர்களை வைத்து வீசவைக்கவில்லை. தற்போது இது பெரிய விமர்சனமாக மாறி வருகிறது.
ரோகித் சர்மா கேப்டன்சியில் மந்தமாக இருந்தார்
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “ஹெட்டுக்கு பவுன்சர் வீசினோமா? நிச்சயமாக அவருக்கு பவுன்சர் வீசி இருக்க வேண்டும். நாம் அதைச் செய்யாத வரை அவர் நமக்கு பெரிய தொந்தரவை தருகிறார். முன்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதி போட்டி என தற்போதும் இதையே செய்கிறார்”
இதையும் படிங்க : 5 விக்கெட் 143 ரன்.. இந்தியாவை காப்பாற்றுமா இலங்கை.. தென் ஆப்பிரிக்கா போராட்டம்.. திரில் கட்டத்தில் 2வது டெஸ்ட்
“பும்ரா அப்போது நான்கு ஓவர்கள் மட்டுமே வீசி இருந்தார் அதில் ஒரு விக்கெட்டும் கைப்பற்றி இருந்தார். ஆனால் மேற்கொண்டு அவரை வைத்து ஹெட்டுக்கு நல்ல முறையில் பவுன்சர்கள் வீச ரோகித் சர்மா முயற்சி செய்யவில்லை. மேலும் அந்த செசன் முழுவதும் பும்ரா பந்து வீசவில்லை. இது கேப்டன்சியில் நல்ல நகர்வு கிடையாது. அவர் மிகவும் மந்தமாக இருந்தார். மேலும் சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வி அடையவும் அவரது கேப்டன்சி மோசமாக இருந்ததும் ஒரு காரணம்” என்று கூறியிருக்கிறார்.






