நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று சிஎஸ்கே அணி தங்களது சொந்த மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது. இந்த தோல்வியின் மூலமாக அந்த அணியின் முக்கிய பிரச்சினைகள் அனைத்தும் வெளிச்சமாகி இருக்கின்றன.
இந்த நிலையில் மற்ற ஐபிஎல் அணிகள் போல சிஎஸ்கே அணி தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்த நிலையில் அந்த அணி ஓரளவுக்கு மற்ற அணிகளுக்கு போட்டித் தர வேண்டும் என்றால் மூன்று முக்கிய மாற்றங்களை செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது.
மற்ற அணிகளின் டாப் 5
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியை தவிர மற்ற ஒன்பது அணிகளின் பேட்டிங் யூனிட்டில் முதல் இடங்களை எடுத்துப் பார்க்கும் பொழுது அதிரடியான பேட்ஸ்மேன்களை வைத்து மிகவும் வலிமையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. வலிமையான மும்பை மற்றும் ஹைதராபாத் முதல் வலிமை குறைவான ராஜஸ்தான் மற்றும் லக்னோ வரை முதல் 5 பேட்ஸ்மேன்கள் பேட்டிங் யூனிட்டில் அதிரடி வீரர்களாக சிறப்பானவர்களாக இருக்கிறார்கள்.
அதே சமயத்தில் சிஎஸ்கே அணியை எடுத்து பார்க்கும் பொழுது அவர்களது பேட்டிங் யூனிட்டில் முதல் ஐந்து இடத்தில் இருப்பவர்களை வைத்து 200 ரன்கள் எடுப்பது சிரமமான ஒன்றாகவே தெரிகிறது. இதன் காரணமாக சிஎஸ்கே அணி தனது பேட்டிங் யூனிட் மற்றும் பவுலிங் யூனிட்டில் மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கிறது.
சிஎஸ்கே செய்ய வேண்டிய மாற்றங்கள்
இந்த நிலையில் தற்போது சிஎஸ்கே பேட்டிங் யூனிட்டில் இருந்து துவக்க ஆட்டக்காரராக விளையாடி வரும் ராகுல் திரிபாதியை வெளியேற்ற வேண்டியிருக்கிறது. இதற்கு அடுத்து மூன்றாவது சுழல் பந்துவீச்சாளராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினும் வெளியேற வேண்டியதாக இருக்கிறது. தீபக் ஹூடாவை வைத்து அஸ்வின் இடத்தை நிரப்பிக் கொள்ள முடியும். மேலும் சாம் கரனும் வெளியேற வேண்டும்.
இதையும் படிங்க : 344 ரன்.. தலைவலியாக மாறிய சாப்மேன்.. பாகிஸ்தான் படுதோல்வி.. நியூசி அணி வெற்றி
இதன்படி சாம் கரன் இடத்தில் டெவேன் கான்வே, ரவிச்சந்திரன் அஸ்வின் இடத்தில் வேகப்பந்துவீச்சாளர் அன்சூல் காம்போச் மற்றும் ராகுல் திரிபாதி இடத்தில் விஜய் சங்கர் ஆகியோர் விளையாட வேண்டியதாக இருக்கிறது. இந்த மூன்று மாற்றங்களையும் செய்வதன் மூலம், மற்ற அணிகள் போல் ஓரளவுக்கு பலம் வாய்ந்த பேட்டிங் யூனிட் மற்றும் பௌலிங் யூனிட்டை சிஎஸ்கே அணியால் உருவாக்க முடியும்






