344 ரன்.. தலைவலியாக மாறிய சாப்மேன்.. பாகிஸ்தான் படுதோல்வி.. நியூசி அணி வெற்றி

0
385
Pakistan

தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருக்கிறது.

இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடந்து கொண்டிருக்கும் வேளையில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி நான்குக்கு ஒன்று என தோற்றது. இதைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தற்பொழுது விளையாடி கொண்டு வருகிறது.

- Advertisement -

அதிரடி சதம் அடித்த சாப்மேன்

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீசுவதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணிக்கு வில் யங் 1, நிக் கேல்லி 15, ஹென்றி நிக்கோலஸ் 11 ரன்கள் என தொடர்ந்து அடுத்தடுத்து வெளியேறினார்கள். இதனால் நியூசிலாந்து அணிக்கு அழுத்தம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து டேரில் மிட்சல் 84 பந்தில் 76 ரன்கள், அறிமுக ஆல்ரவுண்டர் முகமது அப்பாஸ் 26 பந்தில் அதிரடியாக 54 ரன்கள் எடுத்தார்கள். நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த சாப்மேன் 111 பந்துகளில் அதிரடியாக 13 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 132 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்தது. இர்பான் கான் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

நடுவில் சரிந்த பாகிஸ்தான்

இது தொடர்ந்து விளையாட வந்த பாகிஸ்தானுக்கு தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக் 36, உஸ்மான் கான் 39 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பாபர் அசாம் 83 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார்கள். தொடர்ந்து கேப்டன் முகமது ரிஸ்வான் 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்

இதையும் படிங்க : நான் ஏன் முன்னால் பேட்டிங் செய்ய வருவதில்லை?.. தோனி சொன்ன விளக்கம்.. ரசிகர்கள் குழப்பம்

இன்னொரு முனையில் போராடிய சல்மான் அலி ஆகா 48 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். ஒரு கட்டத்தில் நான்கு விக்கெட் இழப்புக்கு மேற்கொண்டு 78 பந்துக்கு 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கின்ற இடத்தில் பாகிஸ்தான் அணி இருந்தது. ஆனால் நடுவில் அப்படியே சரிந்து இறுதியாக 44.1 ஓவரில் 271 ரன்கள் எடுத்து சுருண்டது. நியூசிலாந்து தரப்பில் நாதன் ஸ்மித் நான்கு விக்கெட் கைப்பற்றினார். நியூசிலாந்து அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -