ராகுல் டிராவிட் உடன் ஆடி.. இப்போ அவர் மகன் கூடவும் விளையாடும் 3 இந்திய வீரர்கள்.. தனித்துவ பெருமை

0
1415

இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தனது ஓய்விற்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் பொறுப்பேற்று பணியாற்றினார்.

தற்போது அவரது மகன் சமித் ட்ராவிட் கிரிக்கெட் உலகில் காலடி எடுத்து வைத்திருக்கும் நிலையில், டிராவிட் உடன் விளையாடிய மூன்று இந்திய வீரர்கள் தற்போது அவரது மகனோடு கிரிக்கெட் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய அணியின் பயிற்சியாளராக பல வெற்றிகளை பெற உதவிய ராகுல் டிராவிட் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா இறுதிப் போட்டியில் எதிர்பாராத விதத்தில் தோல்வி அடைந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த டி20 உலக கோப்பையில் வெற்றி பெற்று சாதனை படைத்ததோடு மட்டுமல்லாமல் ராகுல் டிராவிட் மகிழ்ச்சியோடு தனது பயிற்சியாளர் பதவியில் இருந்து ஓய்வு அறிவித்தார்.

இந்த சூழ்நிலையில் தற்போது அவரது மகனான சமித் டிராவிட் 2024 மகாராஜா டிராபியின் மூலம் கிரிக்கெட் உலகில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இந்த நிலையில் அவரோடு மட்டுமல்லாமல் அவரது மகனோடு சேர்ந்து விளையாடும் மூன்று இந்திய அணி கிரிக்கெட் வீரர்கள் குறித்து காண்போம்.

- Advertisement -

1.மயங்க் அகர்வால்

ஐபிஎல் தொடரில் தற்போது சன்ரைசர்ஸ் அணிக்காக தொடக்க இடத்தில் களமிறங்கி விளையாடி வரும் மயங்க் அகர்வால் அண்டர் 19 வீரராக இருந்தபோது, தனது கரியரின் இறுதி கட்டத்தில் இருந்தார் ராகுல் டிராவிட். அண்டர் 19 வீரர்கள் லிஸ்டில் இருந்ததால் இவர் தற்போது டிராவிட் மகனோடு விளையாடுவதில் ஆச்சரியம் இல்லை. 2011ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய போது டிராவிட் அந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார். தற்போது மயங்க் மகாராஜா டி20 டிராபியிலும் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2.மனிஷ் பாண்டே

மயங்க் அகர்வால் டிராவிட்டுக்கு எதிராக விளையாடி இருக்கிறார் என்றால் மனிஷ்பாண்டே 2009 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக டிராவிட் உடன் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திறமையான வீரராக இருந்தும் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. இந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் விளையாடி வரும் மணீஷ் பாண்டே தற்போது மகாராஜா ராபியில் டிராவிட் மகனோடு விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க:எல்லோரும் தோனி இல்லை.. நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவது இப்போதுதான் – கேஎல் ராகுல் பேச்சு

3.கருண் நாயர்

2013ஆம் ஆண்டில் கருண் நாயர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட, அந்த ஆண்டில் ராகுல் டிராவிட் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி இருக்கிறார். தற்போது மகாராஜா டி20 டிராபி தொடரில் ராகுல் டிராவிட் மகன் சமித் ட்ராவிட் விளையாடி வரும் மைசூர் வாரியர்ஸ் அணியின் கேப்டனாக கருண் நாயர் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -