ஐபிஎல் 2025.. தீபக் சாஹரை வறுத்து எடுத்த கவாஸ்கர்.. உங்களுக்கு மன்னிப்பே கிடையாது என பேச்சு

0
21

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் அணிக்கு எதிரான போட்டிகள் கடைசி ஓவரில் தோல்வியை தழுவியது. கடைசி ஓவரில் 15 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் குஜராத் அணி பேட்டிங் செய்தது.

அப்போது பந்து வீசிய தீபக்சாகர் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் மற்றும் ஒரு நோபாலை வீசினார். இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், “தீபக்சாகரின் உடல் மொழி சரியில்லை. அவருடைய முதல் பந்திலயே பவுண்டரி அடிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அவர் நோபால் வீசி இருக்கிறார்.”

- Advertisement -

மன்னிப்பே கிடையாது:

” கடைசி ஓவரில் இது போன்ற கட்டத்தில் நோபால் வீசுவதற்கெல்லாம் மன்னிப்பே கிடையாது. இறுதிக்கட்டத்தில் நடப்பு சீசனில் அவர் முதல் முறையாக பந்து வீசுகிறார் என்று நினைக்கின்றேன். எனினும் ஒரு தொழில் முறை கிரிக்கெட் வீரராக இருந்துவிட்டு, அதையெல்லாம் ஒரு காரணமாக சொல்ல முடியாது.”

“நோபால் வீசுவது மூலம் ஒரு கூடுதல் பந்து மட்டும் கிடைக்கவில்லை. மேலும் பிரீ ஹிட் கிடைக்கிறது. இதனை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வார்கள். இதே போன்று ஒரு பந்துக்கு ஒரு ரன் அடிக்க வேண்டும் என்று நிலை வந்தது.”

- Advertisement -

தீபக் சாஹர் செய்தது தவறு:

“அப்போது தீபக்சாகர் பந்தை வீசிவிட்டு நேராக ஸ்டெம்பை நோக்கி ஓடி வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் பந்து வீசி அங்கே நின்று விட்டார். அவர் மட்டும் ஸ்டெம்ப் அருகே வந்து நின்றிருந்தால் பந்தை பிடித்து அவர் அடித்து இருப்பார். அந்த இடத்திலும் தீபக்சாகர் தவறு செய்துவிட்டார்.”

இதையும் படிங்க: ஐபிஎல் 2025.. சிஎஸ்கே அணி மீண்டும் தவறு செய்கிறது.. தோனி பேட்டிங் செய்ய தேவையில்லை.. ஆகாஷ் சோப்ரா

“மழை பெய்து பின் கொஞ்சம் ஓய்வுக்கு பிறகு பந்து வீசுவது என்பது கடினமான விஷயம் தான். ஆனால் நோபால் வீசுவதை கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியாது என்று கவாஸ்கர் கூறியுள்ளார். தீபக்சாகர் இந்த போட்டியில் மூன்று ஓவர்கள் வீசி 32 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எஞ்சி இருக்கும் இரண்டு போட்டிகளில் இரண்டுமே வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தை தள்ளப்பட்டு இருக்கிறது.

- Advertisement -