வீடியோ- ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த இலங்கை வீரர் பெரேரா.. 36 பந்துகளில் 108 ரன்கள் குவித்து அபாரம்.. விவரம்

0
26

ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் விளாசி இலங்கை வீரர் திசேரா பெரேரா சாதனை படைத்திருக்கிறார். ஆசிய லெஜென்ஸ் லீக் என்ற டி20 கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியுடன் இலங்கை லயன்ஸ் அணி பல பரிட்சை நடத்தியது.

இதில் தொடக்க வீரராக களமிறங்கிய தில்சான் சொற்ப ரன்களில் ஆட்டம் இழ்ந்தார். இந்த நிலையில் மூன்றாவது விக்கெட்டுக்கு ஆட்டத்தின் பத்தாவது ஓவரில்  வந்து இறங்கியதில் இருந்து அதிரடி காட்டிய பெரேரா ரன்களை குவித்தார். 23 பந்துகளில் திசேரா பெரேரா அரை சதம் கடந்தார். அதன் பின் 18 வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களும், 19வது ஓவரில் இரண்டு சிக்சர்களையும் பெரேரா விளாசினார்

- Advertisement -

ஒரே ஒவரில் 6 சிக்சர்கள்:

இந்த நிலையில் 30 பந்துகளில் 72 ரன்கள் குவித்து கடைசி வரை திசேரா பெரேரா  எதிர்கொண்டார். சுழற் பந்துவீச்சாளர் அயன் கான் வீசிய கடைசி ஓவரை பெரேரா எதிர் கொண்டார். முதல் பந்து ஓயிடாக மாற அடுத்த மூன்று பந்துகளையும் பெரேரா சிக்சர்களுக்கு விரட்டி ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார்.

இதனை அடுத்து நான்காவது பந்தை அவர் ஓயிடாக வீச அடுத்த பந்தையும் சிக்ஸர் அடித்தார். இதை அடுத்து மீண்டும் அயன் கான் ஒயிடு வீசி பெரேராவின் உத்வேகத்தை குறைக்க பார்த்தார். ஆனால் கடைசி இரண்டு பந்துகளையும் சிக்சர் விளாசினார். இதன் மூலம் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் விளாச அந்த ஓவரில் மட்டும் இலங்கை அணி 39 ரன்களை சேர்த்தது.

- Advertisement -

36 பந்தில் 108 ரன்கள் குவிப்பு:

இதன் மூலம் திசேரா பெரேரா 36 பந்துகளில் 108 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.  13 சிக்ஸர்களையும் இரண்டு பவுண்டரிகளையும் அடித்தார். நான்காவது விக்கெட்டுக்கு பெரேரா  ஜோடி 62 பந்துகளில் 155 ரன்கள் குவித்தது. மறுமுனையில் பெர்னாண்டோ 56 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2025: சிஎஸ்கே மும்பை போட்டி டிக்கெட் விற்பனை தொடங்கும் நாள் மற்றும் எப்படி வாங்கலாம்.. முழு விபரங்கள் அறிவிப்பு

இதன் மூலம் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் அணியும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. இதனால் போட்டி விறுவிறுப்பாக சென்றது. எனினும் ஆப்கானிஸ்தான் அணி வெறும் எட்டு ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியை தழுவியது. பெரேரா  ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -