ஐபிஎல் 2025: சிஎஸ்கே மும்பை போட்டி டிக்கெட் விற்பனை தொடங்கும் நாள் மற்றும் எப்படி வாங்கலாம்.. முழு விபரங்கள் அறிவிப்பு

0
50

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய முதல் போட்டியை வரும் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. முதல் போட்டியில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சிஎஸ்கே பலப் பரிட்சை நடத்துகிறது.

தோனிக்கு இது கடைசி தொடராக இருக்கும் என்பதால் சிஎஸ்கே ரசிகர்கள் இந்த தொடரை மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா காயம் காரணமாக சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

மும்பை vs சிஎஸ்கே:

இதேபோன்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் கடந்த சீசனில் ஸ்லோ ஓவர் ரேட் பிரச்சனையில் சிக்கியதால் அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அவர் சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க மாட்டார்.

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் எங்கு வாங்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். மார்ச் 19ஆம் தேதி முதல் சிஎஸ்கே விளையாடும் போட்டிக்கான டிக்கெட்கள் விற்பனை தொடங்கப்படும்.

- Advertisement -

எதில் டிக்கெட் வாங்குவது?

இந்த டிக்கெட்டுகள் அனைத்தும் டிஸ்ட்ரிக்ட் ஆப்பிள் பெறலாம் இணையதளத்தில் WWW. district.com என்று முகவரியில் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். கடந்த தொடரில் சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட் விலை 1700, 2500,3500, 4000, 6000 ஆகிய விலையில் டிக்கெட் விற்கப்பட்டது. தற்போது இதே விலை விற்கப்படுமா இல்லை டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது .

இதையும் படிங்க: 27 கோடி ஆனா இந்திய டீம்ல இடமில்லை.. சஞ்சுவை தூக்க ஐபிஎல் ரிஷப் பண்ட் இதை செய்யணும் – ஆகாஷ் சோப்ரா அறிவுரை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே விளையாடும் போட்டியின் அட்டவணை

சிஎஸ்கே vs மும்பை மார்ச் 23 ( மாலை 7.30 மணி)

சிஎஸ்கே vs ஆர்சிபி மார்ச் 27 (மாலை 7.30 மணி)

சிஎஸ்கே vs டெல்லி ஏப்ரல் 5 (மாலை 3:30 மணி)

சிஎஸ்கே vs கேகேஆர் ஏப்ரல் 11 (மாலை 7:30 மணி)

சிஎஸ்கே vs ஹைதராபாத் ஏப்ரல் 25 (மாலை 7:30 மணி)

சிஎஸ்கே vs பஞ்சாப் ஏப்ரல் 30 (மாலை 7.30 மணி)

சிஎஸ்கே vs ராஜஸ்தான் மே 12 (மாலை 7.30 மணி)

- Advertisement -