இந்த இந்திய வீரர் பந்து வீசுவதை பார்க்கையில் அப்படியே வக்கார் யூனிஸ் பந்து வீசுவது போல் உள்ளது – இர்பான் பதான் ஆச்சரியம்

0
1571
Irfan Pathan

22 வயதான ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் கடந்த ஒரு ஆண்டில் பல வாய்ப்புகளை தட்டிப் பறித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.கடந்த ஆண்டு துவக்கத்தில் ஜம்மு காஷ்மீர அணிக்காக முதல் முதலாக சையது முஷ்டாக் அழி டிராபி தொடரில் களமிறங்கினார். பின்னர் பிப்ரவரி மாதம் லிஸ்ட் ஏ போட்டிகளில் ஜம்மு-காஷ்மீர் அணிக்காக விளையாட தொடங்கினார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நடராஜன் காயம் காரணமாக வெளியேற, அவருக்கு மாற்று வீரராக ஐதராபாத் அணியில் உம்ரான் மாலிக் உள்ளே நுழைந்தார். கொல்கத்தா பெங்களூரு மற்றும் மும்பை அணிகளுக்கு எதிராக மூன்று போட்டியில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் உம்ரான் விளையாடினார்.

- Advertisement -

இவரது திறமையைக் கண்ட இந்திய கிரிக்கெட் நிர்வாகம் உலக கோப்பை டி20 தொடரில் இவரை நெட் பௌலராக தேர்ந்தெடுத்துக் கொண்டது. கடந்த ஆண்டு இறுதியில் தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணியிலும் இடம் பெற்று விளையாடினார். அதுமட்டுமின்றி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் இவரை 4 கோடி ரூபாய்க்கு கடந்த ஆண்டு இறுதியில் இனி வரும் ஐபிஎல் தொடருக்காக தக்க வைத்தும் கொண்டது.

நடப்பு ஐபிஎல் தொடரில் அசத்தி வரும் உம்ரான் மாலிக்

7 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை இதுவரை உம்ரான் மாலிக் கைப்பற்றியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் இவருடைய பௌலிங் ஆவெரேஜ் 21.40 ஆக உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேக பந்து வீசிய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் 11 இடத்திலும் உம்ரான் மாலிக் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வக்கார் யூனிஸ்சை பார்ப்பது போல் உள்ளது – இர்பான் பதான்

ஜம்மு காஷ்மீர் அணிக்கு ஆலோசகராக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் பதவி வகித்திருக்கிறார். அப்பொழுதுதான் உம்ரான் மாலிக் விளையாடும் விதத்தை நான் நேரில் பார்த்தேன். அவர் பந்து வீசும் பொழுது அப்படியே பாகிஸ்தானைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான வக்கார் யூனிஸ்சை பார்ப்பது போல் உள்ளது என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பவுலிங் பயிற்சியாளர் டேல் ஸ்டைன் உம்ரான் மாலிக் குறித்து ஒரு சில விஷயங்களை பேசி இருக்கிறார். என்னுடைய பந்துவீச்சை அவர் பிரதிபலிக்கவில்லை. அவர் தன்னுடைய ஸ்டைலில் பந்து வீசி வருகிறார். தொடர்ச்சியாக 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் திறமை அவர் இடத்தில் உள்ளது. வருங்காலத்தில் நிச்சயமாக நம் அனைவரின் கவனத்தையும் இவர் ஈர்த்து விடுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்