எங்க சோக்கர்ஸ் வரலாறு மாறப்போகுது.. நாங்க அந்த ஒரு விஷயத்தை விடப் போறோம் – தெ.ஆ கோச் சவால்

0
92
Walter

உலகக் கோப்பை தொடர்களுக்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கும் எப்பொழுதும் பொருந்தாத விஷயமாகவே இருந்து வந்திருக்கிறது. அந்த அணி மிகச் சிறந்த வீரர்களை உள்ளடக்கிய போதிலும் உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில் வழக்கமாகத் தோற்று சோக்கர்ஸ் என்ற பெயரை சுமந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த முறை அந்த வரலாற்றை மாற்றுவோம் என அந்த அணியின் பயிற்சியாளர் ராப் வால்டர் கூறியிருக்கிறார்.

2000ஆம் காலகட்டத்தில் ஆஸ்திரேலிய அணி அசுர பலத்தில் இருந்த பொழுது, அந்த அணிக்கு கிரிக்கெட்டின் மூன்று துறைகளிலும் சவால் அளிக்கக்கூடிய அணியாக இருந்த ஒரே அணி தென் ஆப்பிரிக்கா மட்டும்தான். ஆனாலும் சாதாரண போட்டிகளில் சிறப்பாக செயல்படும் அந்த அணி, உலகக் கோப்பையில் நாக் அவுட் போட்டி என்று வந்தால் ஒரு சாதாரண அணி போல தோல்வியடையும்.

- Advertisement -

இந்தச் சோகக் கதை தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடர்ந்து முடியாமல் இருந்து கொண்டு வருகிறது. கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இன்னும் ஒரு படி மேலே போய் லீக் சுற்றில் நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்து அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறினார்கள்.

தற்போது நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்ற எல்லா போட்டிகளையும்மிக நெருக்கமாகவே சென்று வெற்றி பெற்றது. சொல்லப்போனால் எல்லா போட்டிகளிலும் தோல்வியின் விளிம்பில் இருந்தது. குறிப்பாக அனுபவமே இல்லாத கத்துக்குட்டி அணியான நேபால் அணியிடம் ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றது. நெதர்லாந்து அணிக்கு எதிராகவும் அப்படியே நடந்தது. லீக் சுற்றில் இந்த இரண்டு போட்டியின் தோற்று இருந்தால் தென் ஆப்பிரிக்கா வெளியேறி இருக்கும்.

- Advertisement -

ஆனால் இந்த முறை தென் ஆப்பிரிக்காவுக்கு நெருக்கமான போட்டிகள் எல்லாமே வெற்றியாக மாறி இருக்கிறது. பொதுவாக அவர்களுக்கு இப்படி நடக்காது. நெருக்கமான போட்டிகள் வந்தாலே அவர்கள் விட்டு விடுவார்கள். இந்த முறை போட்டி எவ்வளவு நெருக்கமாக சென்றாலும் வென்று கொண்டு இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : டி20 ரேங்கிங்.. 2 புள்ளியில் விழுந்த சூர்யா.. மாஸ் காட்டிய ஹெட்.. ரோகித் கிடுகிடு உயர்வு.. மாறிய பட்டியல்

இதுகுறித்து தென் ஆப்பிரிக்கா அணியின் பயிற்சியாளர் ராப் வால்டர் கூறும் பொழுது “கடந்த காலங்களில் மிக முக்கியமான போட்டிகளில் நெருங்கி வந்து தோற்றதெல்லாம் யார் தோற்றார்களோ அவர்களுடையது. தற்போதைய அணி அப்படி தோற்கவில்லை. இந்த அணி வேறு அணி வித்தியாசமான அணி. எனவே நமக்கு எது சொந்தமானதே அதுதான் சொந்தமானது. எனவே பக்கத்தில் இருக்கும் விஷயம் இதுதான். நாங்கள் இந்தத் தொடரில் எல்லைகளை தாண்டி இருக்கிறோம்.எனவே நாங்கள் சரி செய்த விஷயங்கள் குறித்து யோசிக்கிறோம். எனவே மற்றவர்களுக்கு நடந்த சோக்கர்ஸ் விஷயங்களை தூக்கி சுமக்க மாட்டோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -