தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடர் அரையிறுதி சுற்றை எட்டி இருக்கிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள சர்வதேச டி20 போட்டிகள் அடிப்படையில் டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. நீண்ட நாட்களாக முதலிடத்தில் இருந்து வந்த சூரியகுமார் யாதவ் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.
இந்த முறை டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமான ஆடுகளத்தை கொண்ட நியூயார்க் மைதானத்தில் மூன்று போட்டிகளை விளையாடியது. இந்திய வீரர்களில் இந்த மூன்று போட்டிகளில் ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் இருவர் மட்டுமே அரை சதம் அடித்தார்கள். சூரிய குமாருக்கு இரண்டு போட்டிகள் அங்கு மோசமாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து சூப்பர் எட்டு சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சூரியகுமார் யாதவ் அரைசதம் அடித்தார். அதே சமயத்தில் அடுத்து பங்களாதேஷ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக அவரால் பெரிய ஸ்கோருக்கு செல்ல முடியவில்லை. மேலும் அவருடைய வழக்கமான ஸ்ட்ரைக் ரேட் அமெரிக்க நியூயார்க் மைதானத்தில் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி இருக்கிறார். இந்தியாவுக்கு எதிராக கடைசிப் போட்டியில் அதிரடி அரை சதமும் அடித்தார். எனவே அவர் 844 புள்ளிகள் உடன் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். சூரியகுமார் யாதவ் 842 புள்ளிகள் உடன் இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்திற்கு சரிந்து இருக்கிறார்.
இந்த தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்தில் சூரியகுமார் யாதவுக்கு அடுத்து இடம்பெற்றிருக்கும் ஒரே இந்திய வீரராக ஜெய்ஸ்வால் 672 புள்ளிகள் உடன் ஏழாவது இடத்தில் இருக்கிறார். மேலும் ருதுராஜ் முதல் 20 இடங்களில் 19ஆவது இடத்தில் இருக்கிறார். இதற்கு அடுத்து ரோகித் சர்மா 13 ரன்கள் முன்னேறி 39 வது இடத்தில் இருக்கிறார். விராட் கோலி, கில் போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் மிகவும் கீழே இருக்கிறார்கள்.
இதையும் படிங்க : பும்ரா பாய் பவுலிங் வீடியோ கேம் மாதிரி.. என்னோட எல்லா விக்கெட்டும் அவரோடது.. காரணம் இதான் – அர்ஸ்தீப் சிங் பேட்டி
ஐசிசி டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியல்
டிராவிஸ் ஹெட் – 844
சூரியகுமார் யாதவ் – 842
பில் சால்ட் – 815
பாபர் அசாம் – 755
முகமது ரிஸ்வான் – 746
ஜோஸ் பட்லர் – 716
யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – 672
எய்டன் மார்க்ரம் – 659
பிராண்டன் கிங் – 656
ஜான்சன் சார்லஸ் – 655






