நடப்பு ஐபிஎல் தொடரில் இந்த அணி மட்டும் கோப்பையை வென்று விடக்கூடாது – விரேந்திர சேவாக் அதிர்ச்சி

0
5605
Virender Sehwag IPL 2021

நடப்பு ஐபிஎல் தொடருக்கான லீக் சுற்று போட்டிகள் வருகிற அக்டோபர் 8ஆம் தேதி உடன் நிறைவுக்கு வருகிறது. அதன் பின்னர் பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டிகள் நடைபெறும். பலமிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி அடைந்துள்ளன. மீதமுள்ள இரண்டு இடங்களில் எந்த அணிகள் இறுதியில் இடம் பெறப் போகிறதென அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

11 போட்டிகளில் விளையாடியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. எஞ்சியுள்ள 3 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று விட்டாலே அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி அடைந்துவிடும். எனவே மும்பை, கொல்கத்தா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகளில் எந்த அணி இறுதியில் நான்காவது இடத்தை பிடித்து, ப்ளே ஆஃப் சுற்றுக்கு நுழைய போகிறது என்பதே தற்போதைய மிகப்பெரிய கேள்வியாகும்.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணி ஆனால் நிச்சயமாக இறுதி வரை செல்ல முடியும்

கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களில், மும்பை இந்தியன்ஸ் அணி மிக அபாரமாக விளையாடியது. குறிப்பாக லீக் போட்டிகளில் அற்புதமாக விளையாடிய அந்த அணி, தொடர்ச்சியாக இரண்டு முறையும் நம்பர் ஒன் இடத்தை தக்கவைத்துக் கொண்டது. 2019ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் சென்னை அணியையும், அதேபோல 2020 ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போட்டியில் டெல்லி அணியையும் சாமர்த்தியமாக வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது.

ஆனால் இந்த ஆண்டு அந்த அணியில் நிறைய விஷயங்கள் தவறியுள்ளது. குறிப்பாக வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து முழு பங்களிப்பை வெளிப்படுத்தி விளையாட தவறுகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணி இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்கிற கட்டாயத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு சாம்பியன் அணி ஆகும். லீக் போட்டிகளில் சுமாராக விளையாடி, தொடரில் இருந்து வெளியேறும் சூழ்நிலையில் அந்த அணி இருப்பது போல் இருக்கும். ஆனால் இறுதியில் அந்த அணி மிக சாமர்த்தியமாக விளையாடி இறுதிப்போட்டி வரை முன்னேறி, கோப்பையையும் கைப்பற்றி செல்லும். அதனுடைய கடந்தகால வரலாற்றை எடுத்துப் பார்த்தால் இது அனைவருக்கும் புரியும். என்னைப் பொருத்தவரையில் மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயமாக இறுதிப்போட்டி வரை முன்னேறி கூடிய ஆற்றல் உடைய அணி என்று விரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

- Advertisement -

புதிய அணி தான் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை கைப்பற்ற வேண்டும்

இறுதிப்போட்டி வரை முன்னேறி நடப்பு ஐபிஎல் தொடரில் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் அளவுக்கு ஆற்றல் உடைய அணியாக திகழ்ந்தாலும், அந்த அணி கோப்பையை கைப்பற்ற கூடாது என்று சேவாக் அதிரடியாக கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு புதிய அணி தொடரை கைப்பற்ற வேண்டும். அந்த புதிய அணியே கோப்பையை கைப்பற்ற வேண்டும். இதுவே என்னுடைய விருப்பம் என்று சேவாக் கூறியுள்ளார்.

இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றிடாத டெல்லி, பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகளில் ஏதேனும் ஒரு அணி இதை நிகழ்த்திக் காட்டினால் தனக்கு மிகவும் சந்தோஷம் என்றும் கூறியுள்ளார்