இந்த தமிழக வீரர் வைல்ட் கார்டில் உலகக் கோப்பை இந்திய அணிக்கு வரப்போறார் – ஆச்சரியத்தை கிளப்பும் இந்திய முன்னாள் வீரர்!

0
294
ICT

தற்பொழுது ஆசிய கோப்பை ஒரு நாள் தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் 17 பேர் கொண்ட இந்திய அணியில் இருந்துதான், இந்தியாவில் அக்டோபர் மாதம் துவங்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணி தேர்வு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

அதே சமயத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சில வீரர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களுக்கு இன்னும் கதவு முழுமையாக அடைக்கப்படவில்லை. அந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய நிலைமை உண்டானால் நிச்சயம் அவர்களை இறுதி நேரத்தில் கூட தேர்வு செய்வோம் என்பதாக கூறியிருந்தார்.

- Advertisement -

ஆசியக் கோப்பை க்கு அறிவிக்கப்பட்ட 17 பேர் கொண்ட இந்திய அணியில் ஒரு ஆப் ஸ்பின் பவுலர் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். அதே சமயத்தில் ஒரே ஒரு மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர் மட்டுமே இருக்கிறார். ஆனால் இரண்டு இடது கை சுழற் பந்துவீச்சாளர்கள் அணியில் இடம் பெற்று இருக்கிறார்கள்.

இந்திய அணியின் பவுலிங் யூனிட்டை பொருத்தவரை எடுத்துக் கொண்டால், அதை நம்பி இந்திய அணி இருப்பதாக தெரியவில்லை. மாறாக பலமான பேட்டிங் வரிசையை கொண்டு பெரிய ரன்கள் எடுத்து, அதன் மூலம் வெற்றியடைவதற்கான அணியாக தான் இந்திய அணி தெரிகிறது.

இந்திய மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்க இருக்கின்ற காரணத்தினால், அணியில் இன்னும் ஒரே ஒரு சுழற் பந்துவீச்சாளர் தேவை என்கிற கட்டாயம் நிலவுகிறது. அவர் பேட்டிங்கும் செய்யக்கூடிய வகையில் இருப்பதும் முக்கியமாக இருக்கிறது.

- Advertisement -

இந்த வகையில் எடுத்துக் கொண்டால், இந்திய அணியில் தற்பொழுது ஆப் ஸ்பின்னர் யாரும் இல்லாத காரணத்தினால், பேட்டிங் செய்யக்கூடிய ஆப் ஸ்பின்னர்களான அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இல்லை இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் இருவரில் ஒருவருக்கான வாய்ப்பு இப்பொழுது வரை இருக்க செய்கிறது.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ” வாஷிங்டன் சுந்தர் தற்பொழுது புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். ஆசியக் கோப்பை இந்திய அணியில் அவர் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஆனால் தற்போதைய அணியில் ஒரு ஆப் ஸ்பின்னர் இல்லை. எனவே அவர் வைல்ட் கார்டு மூலமாக உலகக் கோப்பை இந்திய அணியில் வருவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது.

அவர் பந்துவீச்சில் விக்கெட்டுகளை எடுத்தால், பேட்டிங் கிடைக்கும் போது ரன்களை எடுத்தால், இங்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். அவர் உலகக்கோப்பை இந்திய அணிக்கான ஒரு சுவாரசியமான எதிர்பார்ப்பை உண்டாக்கக்கூடிய தேர்வாக இருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!