ஃபேப் டு பிளசிஸ் விளையாடிய இடத்தில் இந்த வீரர்கள் விளையாடினால் சரியான தீர்வாக இருக்கும் – இர்பான் பதான் கணிப்பு

0
62
Faf du Plessis and Irfan Pathan

சென்னை அணிக்கு 2011 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலும் பின்னர் 2018 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரையிலும் பல போட்டிகளில் மிக அற்புதமாக பேட்டிங் செய்வது மற்றும் அதைவிட அற்புதமாக ஃபீல்டிங் செய்வது என ஒரு ஆஸ்தான வீரராக ஃபேப் டு பிளேசிஸ் விளையாடி வந்தார். குறிப்பாக கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் மொத்தமாக 633 ரன்கள் குவித்து சென்னை அணி கோப்பையை வெல்ல மிக முக்கிய காரணமாக விளங்கினார்.

மீண்டும் சென்னை அணியில் இந்த ஆண்டு அவர் நிச்சயமாக விளையாடுவார் என்று சென்னை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், பெங்களூர் அணி அவரை 7 கோடி ரூபாய்க்கு இன்று கைப்பற்றியது.

- Advertisement -

அவருக்கு ஏற்ற மாற்று வீரர்கள் இவர்தான்

சமீபத்தில் பேசிய முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் சென்னை அணிக்கு ஃபேப் டு பிளேசிஸ் விளையாடிய இடத்தில் எந்த வீரர்கள் இடம்பெற்ற விளையாடினால் சிறப்பாக இருக்கும் என்று கணித்து கூறியுள்ளார்.

சென்னை அணியில் ஒரு பக்கம் ருத்ராஜ் ஓபனிங் வீரராக விளையாடப் போகிறார். அவருக்கு ஜோடியாக தற்பொழுது ஃபேப் டு பிளேசிஸ் இல்லை. எனவே அந்த இடத்தில் நியூசிலாந்து அணியை சேர்ந்த டெவான் கான்வேயை விளையாட வைக்கலாம். மகாராஷ்டிராவில் உள்ள கிரிக்கெட் மைதானங்கள் அவருக்கு ஏற்றப்படி இருக்கும் என்று நம்புகிறேன்.

ஒருவேளை அவர் சிறப்பாக செயல்பட வில்லை என்றால் ராபின் உத்தப்பாவை ஓபனிங் இடத்தில் விளையாட வைக்கலாம். மறந்துவிட வேண்டாம் அவரும் ஒரு சிறப்பான ஓபனிங் வீரர். எனவே இவர்கள் இருவரில் எந்த வீரர் மிக சிறப்பாக விளையாடுகிறாரோ அந்த வீரரை விளையாட வைக்கலாம் என்று இர்பான் பதான் கணித்துள்ளார்.

- Advertisement -

ராபின் உத்தப்பா விளையாட வைத்தால் சென்னை அணிக்கு கூடுதல் சலுகை கிடைக்கும்

சென்னை அணியில் ஓவர்சீஸ் வீரர்களாக நிச்சயமாக பிராவோ, அடம் மில்னே மற்றும் மொயின் அலி விளையாட போகிறார்கள். வேகப் பந்து வீச்சுக்கும் நல்ல பவுன்ஸ்சிங் டிராக்கிற்கும் மகாராஷ்டிரா மைதானத்தில் பிராவோ, அடம் மில்னே இருவரும் நிச்சயமாக விளையாடி ஆக வேண்டும். அதேசமயம் அதிரடி ஆல்ரவுண்டர் வீரர் மொயின் அலி நிச்சயமாக அணியில் விளையாடி ஆக வேண்டும்.

தற்பொழுது கான்வே ஒருவேளை விளையாடாமல் ராபின் உத்தப்பாவே விளையாடினால், கான்வே இடத்தில் இலங்கையைச் சேர்ந்த இளம் ஸ்பின் பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷனவை விளையாட வைக்கலாம். அவருடைய பந்து வீச்சு மிக அற்புதமாக இருக்கும். எனவே ராபின் உத்தப்பா தொடர்ச்சியாக விளையாடினால், சென்னை அணிக்கு கூடுதல் சலுகை( மஹீஷ் தீக்ஷன அணியில் விளையாடலாம்) கிடைக்கும் என்று இர்பான் பதான் விளக்கம் அளித்துள்ளார்.

- Advertisement -