இவர் தான் ஜூனியர் எம்.எஸ்.தோனி ; கேப்டன் தோனியிடமும் இவரிடமும் பல ஒத்துமைகள் உள்ளன – தமிழக வீரர் சாய் கிஷோர் கருத்து

0
93

நடந்து முடிந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை குஜராத் அணி கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்று முதல் ஐபிஎல் கோப்பையை அந்த அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வந்த ஹர்திக் பாண்டியா இந்த ஆண்டு குஜராத் அணியின் கேப்டனாக சிறப்பாக விளையாடி இருக்கிறார். பேட்டிங் பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் மிக சிறப்பாக தனது திறமையை நிரூபித்திருக்கிறார். இவை அனைத்தையும் விட கேப்டனாக அவர் தனது அணியை வழிநடத்திய விதம் மிக அற்புதமாக இருந்தது.

- Advertisement -

ஹர்திக் பாண்டியாவை பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் புகழ்ந்து வந்தவண்ணம் இருக்கையில் குஜராத் அணியில் விளையாடிய முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சாய் கிஷோர் தற்போது ஹர்திக் பாண்டியா வெகுவாக பாராட்டிப் பேசியிருக்கிறார்.

எம்எஸ் தோனிக்கும் அவருக்கு நிறைய ஒற்றுமைகள் உண்டு

மகேந்திர சிங் தோனியின் ஜூனியர் வெர்ஷன் தான் ஹர்திக் பாண்டியா. இவர்கள் இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. எம்எஸ் தோனி தனது அணியில் விளையாடும் வீரர்களிடமிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவார். அதேபோல ஹர்திக் பாண்டியா ஆகும் தனது அணியில் விளையாடும் வீரர்களின் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வருகிறார்.அவர்கள் இருவரும் தங்கள் அணியை தங்களுக்கு முன் வைத்து விளையாடுவார்கள். இவ்வாறு சாய் கிஷோர் ஹர்திக் பாண்டியா குறித்து வெகுவாகப் பாராட்டிப் பேசியிருக்கிறார்.

- Advertisement -

நடந்து முடிந்து ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா 15 ஆட்டங்களில் சராசரியாக 44.27 மற்றும் 131.27 ஸ்ட்ரைக் ரேட்டில் 487 ரன்கள் குவித்திருக்கிறார். அதேபோல பந்துவீச்சில் 8 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியிருக்கிறார்.