இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் நடைபெற இருக்கும் லண்டன் ஓவல் மைதானத்தின் ஆடுகள தயாரிப்பாளர் இடம் கவுதம் கம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இது குறித்து ஆடுகள தயாரிப்பாளர் பேட்டி அளித்திருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் லண்டன் தி ஓவல் மைதானத்தில் துவங்க இருக்கிறது. எதற்காக இரு அணிகளும் தற்போது அந்த மைதானத்தில் முகாமிட்டு பயிற்சி பெற்று வருகின்றன.
எதனால் வாக்குவாதம் நடைபெற்றது?
இன்று இந்திய பயிற்சியாளர் குழு ஆடுகளத்தின் அருகில் நடந்து செல்லும் பொழுது, ஓவல் மைதானத்தின் ஆடுகளப் பராமரிப்பாளர்களில் ஒருவர் ஆடுகளத்தில் இருந்து இரண்டரை மீட்டர் தள்ளி நடக்குமாறு கூறியிருக்கிறார். இதுவே ஆடுகளம் தயாரிப்பாளருக்கும் கம்பீருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.
இது குறித்து இந்திய பேட்டிங் பயிற்சியாளர் கூறும் பொழுது தாங்கள் ஜாக்கிங் செல்லும் காலணிகளை அணிந்திருந்ததாகவும், இதனால் அந்த பகுதியில் நடக்கும் பொழுது எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும், ஆனால் ஓவல் மைதான ஆடுகள தயாரிப்பாளர் தேவையில்லாமல் தலையிட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் கம்பீர் யாரிடம் வேண்டுமானாலும் புகார் செய்து கொள்ளலாம் என கோபமாக கூறியிருந்தார்.
ஆடுகள தயாரிப்பாளர் நழுவல்
இந்த நிலையில் இந்த பிரச்சினை மேற்கொண்டு பெரிதாகாமல் தடுக்கப்பட்ட இருப்பதாக தெரிகிறது. ஆடுகள தயாரிப்பாளர் தேவையில்லாத விஷயங்களில் தலையிடக்கூடாது என கம்பீர் மிகவும் கோபமாக பேசி இருந்த பொழுதும் கூட, இப்போதைக்கு இங்கிலாந்து தரப்பு இதை பெரிதாக்காமல் இருப்பது தெரிகிறது.
இதையும் படிங்க : லண்டன் ஓவல் ஆடுகள பராமரிப்பாளருடன் பயிற்சியாளர் கம்பீர் மோதல்.. யார் கிட்ட வேணாலும், புகார் கொடு! சீறிப் பாய்ந்த கம்பீர். என்ன நடந்தது?
இதுகுறித்து ஓவல் ஆடுகள தயாரிப்பாளர் பேசும் பொழுது ” அடுத்து ஒரு பெரிய போட்டி வரப்போகிறது. நான் கம்பீர் உடன் எப்படி இருக்கிறேன் என்பது குறித்து இங்கு பிரச்சினையே கிடையாது. நான் அவரை சந்தித்து இருக்கிறேன் என்பது கூட இங்கு முக்கியமானது இல்லை. அது எனது வேலையும் கிடையாது. இப்போதைக்கு நான் நலமாக இருக்கிறேன். இதில் மறைப்பதற்கு எதுவும் கிடையாது” என்று கூறி இருக்கிறார்.






