லண்டன் ஓவல் ஆடுகள பராமரிப்பாளருடன் பயிற்சியாளர் கம்பீர் மோதல்.. யார் கிட்ட வேணாலும், புகார் கொடு! சீறிப் பாய்ந்த கம்பீர். என்ன நடந்தது?

0
400

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரும் வியாழக்கிழமை விளையாட இருக்கின்றது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும்.

ஆனால் இங்கிலாந்து அணி இந்த போட்டியை டிரா செய்தால் கூட இந்திய அணி தொடரை இழந்து விடும். இதன் காரணமாக லண்டன் ஓவல் ஆடுகளத்தை பேட்டிங்கிற்கு சாதகமாக அமைத்து டிரா செய்ய இங்கிலாந்து அணி முயற்சி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் லண்டன் ஓவல் மைதானத்தில் உள்ள ஆடுகளம் எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை பார்ப்பதற்காக பயிற்சியாளர் கம்பீர் சென்றுள்ளார்.

- Advertisement -

கோபமடைந்த கம்பீர்:

அப்போது கள பராமரிப்பாளர் போர்ட்டீஸ் கம்பீரை தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கடுப்பான கம்பீர், “நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ எனக்கு சொல்லித் தராதே. நீ இந்த மைதானத்தின் சாதாரண ஒரு ஊழியர் தான். அதற்கு மேல் நீ யாரும் கிடையாது” என்று கோபமாக கத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது மைதான ஊழியர் போர்ட்டீஸ், “நீங்கள் இவ்வாறு நடந்து கொண்டால் நான் முறைப்படி புகார் அளிக்க நேரிடும்” என்று எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். அதற்கு மேலும் கோபம் அடைந்த கம்பீர், “நீ எங்கு வேண்டுமானாலும் யார்கிட்ட வேண்டுமானாலும் புகார் அளித்துக்கொள். எனக்கு எந்த கவலையும் இல்லை” என்று பதிலடி கொடுத்திருக்கின்றார்.

- Advertisement -

கள பராமரிப்பாளர் சாடல்:

இதனை அடுத்து இந்திய  அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்க்கல், பேட்டிங் பயிற்சியாளரான கோட்டாக், கம்பீரை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். இந்த மோதலின் போது பயிற்சியாளர் மோர்க்கல்,  நாங்கள் ஆடுகளத்தை எந்த சேதமும் செய்யவில்லை. அது எவ்வாறு இருக்கிறது என்று தான் பார்த்தோம் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்.. இந்திய அணி பிளேயிங் லெவனில் 2 மாற்றம்.. பும்ரா விளையாடுவாரா?

இதனிடையே, கம்பீரிடம் அப்படி என்ன மோதல் நடந்தது என்று போர்ட்டீசிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு இந்த கேள்வியை நீங்கள் கம்பீரிடம் சென்று கேளுங்கள்.  அவரை நான் வாழ்நாளில் இப்போதுதான் முதலில் பார்க்கின்றேன். அவர் எப்படிப்பட்ட மனிதன் என்று நாம் அனைவரும் இப்போது பார்த்து விட்டோம் என்று கூறியுள்ளார்.

- Advertisement -