“அஷ்வின் இதனால் தான் விக்கெட் எடுக்கிறார்!” – கவாஸ்கர் கூறும் அசத்தலான காரணங்கள்!

0
8041
Ashwin

மூன்று நாட்களுக்கு முன் நாக்பூர் மைதானத்தில் துவங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபியின் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்திருக்கிறது!

இந்த ஆட்டத்தில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மட்டும் பேட்டிங் செய்து 400 ரன்கள் குவித்து, ஆஸ்திரேலியாவை இரண்டு இன்னிங்ஸ் விளையாட வைத்து 20 விக்கட்டுகளை கைப்பற்றி, மூன்று நாட்களுக்குள் போட்டியை முடித்து வென்றது மிகப்பெரிய தரமான சம்பவம் ஆகும்!

- Advertisement -

இந்திய அணி தரப்பில் பேட்ஸ்மேன் கேட்டகிரியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மட்டுமே 120 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை அணிக்கு தந்தார். மற்றபடி பேட்ஸ்மேன்கள் யாரும் பெரிதாக விளையாடவில்லை. ஆனால் இந்திய பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா அக்சர் இருவரும் அரை சதங்கள் விளாசி அருமையான முன்னிலைக்கு இந்திய அணியை கொண்டு சென்றனர்.

இந்த போட்டியில் நான்கு விக்கட்டுகளை இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தி இருக்க மீதி 16 விக்கெட்டுகளை இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் வீழ்த்தி இருக்கிறார்கள். அஸ்வின் எட்டு விக்கெட், ஜடேஜா ஏழு விக்கெட், அக்சர் ஒரு விக்கெட் !

இதில் இரண்டாவது இன்னிங்ஸில் மிகச் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் ஐந்து ஆஸ்திரேலியா விக்கெட்டுகளை அனாயசமாக வீழ்த்தி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் தன்னம்பிக்கையை மொத்தமாக உடைத்து எறிந்தார்.

- Advertisement -

இதுகுறித்து இந்திய அணியின் லெஜெண்ட் வீரர் கவாஸ்கர் கூறுகையில்
” நான் அவரை எப்போதும் சிறந்த ஆப் ஸ்பின் லெஜன்ட் என்று கருதுகிறேன். ஆஸ்திரேலியாவில் நாதன் லயன் வெற்றிகரமாக இருந்தாலும், ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு பந்துவீச்சாளராக ஒரு பேட்ஸ்மேனை முழுமையாக படித்து, ஒரு பேட்ஸ்மேனுக்கு எங்கெங்கு ஃபீல்டிங் இருக்க வேண்டும் என்கின்ற அளவுக்கு தெளிவானவர்!” என்று கூறி இருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “இன்று அவரது ஒரு குறிப்பிட்ட பந்தை உஸ்மான் கவாஜா பவுண்டரி அடித்ததை பார்த்தோம். இதனால் கவஜா மீண்டும் அப்படி ஒரு பந்தை வீசும் பொழுது அடிப்பதற்கு சென்று ஆட்டம் இழந்தார். நீங்கள் ஒரு விக்கட்டை பெற வேண்டுமென்றால் நீங்கள் ரன்னையும் தர வேண்டும். அது சரியாகவே நடந்தது. முதலில் வீசிய பந்து ஆஃப் வாலி. ஆனால் இரண்டாவது வீசிய பந்து அப்படி கிடையாது ஆனால் அப்படி என்பது போல தெரிந்த பந்து. அந்தப் பந்தை அவரது உடம்பிலிருந்து கொஞ்சம் தள்ளி வெளியே வீசினார். இறுதியில் அவருக்கு விக்கெட் கிடைத்தது. இப்படியான காரணங்களால் தான் அஸ்வினுக்கு விக்கட்டுகள் தாராளமாக கிடைக்கிறது” என்று கூறியிருக்கிறார்!