ஆஸ்திரேலியர்கள் மனம் உடைந்தது இந்த இடத்திலாதான் இருக்கும் – விராட் கோலி பயிற்சியாளர் விவரிப்பு!

0
1717
BGT

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் மிக நல்ல விதமாக இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக நடந்து முடிந்திருக்கிறது!

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியை பந்துவீச்சில் எடுத்ததும் இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் மிரட்டி துவக்க ஆட்டக்காரர்கள் இருவரது விக்கட்டையும் பறித்தார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து தற்போதைய இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான சுழற் பந்து வீச்சு கூட்டணியான ஜடேஜா அஸ்வின் கூட்டணி மீதம் இருந்த ஆஸ்திரேலியாவின் எட்டு விக்கெட்டுகளையும் பறித்து அவர்களை 177 ரன்களில் சுருட்டியது. ஜடேஜா ஐந்து விக்கட்டுகளை எடுத்துக் கொள்ள அஸ்வின் தாராளம் காட்டி மூன்று விக்கட்டுகளை எடுத்துக் கொண்டார்.

இதற்கடுத்து இந்திய அணி பேட்டிங் செய்யும்பொழுது அஸ்வின் நைட் வாட்ச்மேன் ஆக வந்து ஆட்டம் இழக்காமல் அடுத்த நாள் நின்று 23 ரன்களையும் எடுத்துக் கொடுத்தார். இதற்கடுத்து ஒரு முனையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மிகச் சிறப்பாக விளையாடினாலும், முன்னணி பேட்ஸ்மேன்களான புஜாரா மற்றும் விராட் கோலி, அறிமுக விக்கெட் கீப்பர் பரத், சூரியகுமார் ஆகியோர் சரியாக விளையாடவில்லை.

இந்த நேரத்தில் பந்துவீச்சில் அசத்திய ரவீந்திர ஜடேஜா 70 ரன்கள் திரட்டி ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியைத் தந்தார். இதற்கு அடுத்து வந்த பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் 84 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு அயற்சியைத் தந்தார். இந்த இடத்தில்தான் ஆஸ்திரேலியாவின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் போய், ஆட்டமும் கைவிட்டுப் போய்விட்டது. இதற்கு அடுத்து வந்த அவர்கள் 91 ரன்களில் சுருண்டு இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இதில் அஸ்வின் ஐந்து விக்கட்டுகளை வீழ்த்தி ஆச்சரியப்படுத்தினார்.

- Advertisement -

இந்த நிலையில் இந்த ஆட்டம் குறித்து பேசி உள்ள விராட் கோலியின் சிறு வயது பயிற்சியாளர் கூறுகையில்
” அஸ்வின் மற்றும் ஜடேஜா இவர்களது பார்ட்னர்ஷிப்பை பார்க்கையில் எனக்கு அனில் கும்ப்ளே ஹர்பஜன்சிங் ஞாபகத்துக்கு வருகிறார்கள். அவர்களும் மூட்டையாக விக்கட்டுகளை எடுப்பார்கள். ஆஸ்திரேலியர்கள் அஸ்வின் ஜடேஜாவை எப்படி எதிர்கொள்வது என்று கனவிலும் யோசிப்பார்கள். இப்படியான தரமான சுழற் பந்துவீச்சாளர்கள் நம்மிடம் இருப்பது நம்முடைய அதிர்ஷ்டம்” என்று கூறி இருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” ஒரு காலத்தில் இந்திய அணியின் பேட்டிங் கடைசி வரிசையில் அசைவில்லாமல் இருந்தது. ஆனால் தற்போது அஸ்வின் ஜடேஜா அக்சர் என்று பெரிய ஆல்ரவுண்டர்கள் பட்டாளம் இருக்கிறது. உண்மையில் ஆஸ்திரேலியர்கள் இந்த இடத்தில் தான் மனம் உடைந்து போய் இருப்பார்கள். பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்து இருப்பார்கள் ஆனால் பேட்டிங்கில் இப்படியான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்து இருக்கவே மாட்டார்கள்!” என்று கூறியுள்ளார்!