நாங்க எங்களோட பெஸ்ட் கிரிக்கெட்டே ஆடல.. அதுக்கே இந்தியாவை காலி பண்ணிட்டோம் – ஸ்டீவ் ஸ்மித் ஆணவப் பேச்சு!

0
406

நாங்கள் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனாலும் தொடரை கைப்பற்றியது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது என்று பேசியுள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.

டெஸ்ட் தொடர் முடிவுற்ற பிறகு, இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதின. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றதால், தொடர் சமனில் இருந்தது.

- Advertisement -

வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு மிட்ச்சல் மார்ஸ், டிராவிஸ் ஹெட் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோர் சிறப்பாக விளையாட ஆஸ்திரேலியா அணி 269 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இலக்கை பின்தொடர்ந்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா-சுப்மன் கில் இருவரும் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். விராட் கோலி அரைசதம் கடந்து ஆட்டம் இழந்தார். கேஎல் ராகுலும் சிறிது பார்ட்னர்ஷிப் அமைத்து நம்பிக்கை கொடுத்தார்.

கடைசி 20 ஓவர்களில் 115 ரன்கள் தேவை என இருந்தபோது, இந்திய அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்ட முடியாமல் 248 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மூன்றாவது ஒருநாள் போட்டியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரையும் இரண்டுக்கு ஒன்று என்ற கணத்தில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது.

- Advertisement -

கடைசியாக 2019 ஆம் ஆண்டு இந்திய அணி சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்திருக்கிறது. அதுவும் ஆஸ்திரேலியா அணியிடம்தான். அதன் பிறகு தற்போது மீண்டும் ஒருமுறை ஆஸ்திரேலிய அணியிடம் ஒருநாள் தொடரை இழந்திருக்கிறது.

போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில், “நான் இந்த சுற்றுப்பயணத்தை நன்றாக என்ஜாய் செய்தேன். இன்றைய போட்டியில் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை, ஆனாலும் வெற்றி பெற்றது மகிழ்ச்சியை தருகிறது. பேட்டிங்கில் சில தவறுகளை செய்திருந்தோம். இந்த பிட்ச் முழுக்க முழுக்க வித்தியாசமாக இருந்தது.”

“வேகப்பந்துவீச்சுக்கு எடுபடவில்லை. ஆனால் ஸ்பின்னர்கள் மிகச்சிறப்பாக வேலையை செய்து முடித்தார்கள். பேட்டிங்கில் சில விக்கட்டுகளை தவறான நேரத்தில் இழந்தோம். ஆனால் கீழ் வரிசையில் இறங்கியவர்கள் 269 ரன்கள் வரை எடுத்துச் சென்று நல்ல டோட்டலை அமைத்துக் கொடுத்தார்கள். இதை கட்டுப்படுத்த முடிந்தது நல்ல உணர்வு.” என்றார்.