“என் தந்தை இறந்தபோது ரவி பாய் என்னிடம் கூறியது இதுதான்” – முஹம்மத் சிராஜ் மனம் திறந்த பேட்டி!

0
140

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டி தொடர் இன்றுடன் முடிவடைய இருக்கிறது. நான்கு போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 480 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 571 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடி 186 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 91 ரன்கள் முன்னிலை பெற்றது.

- Advertisement -

ஐந்தாவது மற்றும் கடைசி நாளான இன்று தேநீர் இடைவேளை வரை ஆஸ்திரேலியா 162 ரன்களுக்கு இரண்டு விக்கெட்களை இழந்துள்ளது. இதன் மூலம் அந்த அணி 71 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது . இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் இந்த டெஸ்ட் போட்டி தொடரின் முதல் மூன்று போட்டிகளில் ஆடிய நிலையில் இறுதி போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. தற்போது ஐசிசி பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் ஒரு நாள் போட்டியில் முதலிடத்தில் இருக்கும் வீரர் இவர் தான்.

ஐபிஎல் போட்டி தொடர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடி வரும் இவர் அந்த அணியின் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாட் காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார் . கடந்த 2020-21 ஆம் ஆண்டு இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் போது இந்தியா அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முஹம்மது சிராஜ் ஆஸ்திரேலியாவில் குவாரன்டைனில் இருந்தபோது அவரது தந்தை இந்தியாவில் உடல் நலம் குறைபாட்டினால் மரணம் அடைந்தார். ஆனாலும் முகமது சிராஜ் அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளாமல் தனது தந்தையின் கனவை நினைவாக்குவதற்காக ஆஸ்திரேலியாவில் இந்திய அணியுடன் இருந்தார்.

மேலும் இந்திய அணி அந்தத் தொடரில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மற்றும் பிரிஸ்பேன் டெஸ்ட் ஆகியவற்றில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. கடைசி டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தனது தந்தை இறந்ததற்கு அடுத்த நாள் பயிற்சிக்காக சென்ற போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி தன்னிடம் கூறிய வார்த்தைகளை பகிர்ந்திருக்கிறார் முகமது சிராஜ் . இது பற்றி பேசிய அவர் ” எனது தந்தை இறந்த பிறகு மறுநாள் நான் பயிற்சிக்காக சென்றேன். அப்போது என்னை சந்தித்து ஆறுதல் கூறிய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்த டெஸ்ட் தொடரில் நீ கண்டிப்பாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்துவாய் அதுதான் உனது தந்தையின் ஆசிர்வாதம் என கூறினார். மேலும் நான் பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு அன்று இரவு டீம் டின்னரில் என்னை அழைத்த ரவி சாஸ்திரி ” நீ ஐந்து விக்கெட் களை எடுப்பாய் என்று நான் சொன்னேன் அல்லவா! இதுதான் உன் தந்தையின் ஆசிர்வாதம் என நெகிழ்ச்சியுடன் கூடியதாக தெரிவித்திருக்கிறார்.