2வது டெஸ்ட்டில் நான் அதிரடியாக ஆடியதற்கு இதுதான் உதவியது – ஜானி பேர்ஸ்டோ கருத்து

0
99

சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து முடிந்தது. கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 299 ரன்கள் தேவை. எப்படியும் ஏறக்குறைய போட்டி டிரா ஆகிவிடும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் ஜானி பேர்ஸ்டோ மிக அதிரடியாக விளையாடி இங்கிலாந்து அணியை வெகு சீக்கிரத்தில் வெற்றிபெற வைத்தார்.

அந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் மொத்தமாக பேர்ஸ்டோ 92 பந்துகளில் 14 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் உட்பட 136 ரன்கள் குவித்தார். 51 பந்துகளில் 51 ரன்கள் என்று முதலில் அரைசதம் அடித்த அவர் பின்னர் 26 பந்துகளில் அடுத்த 50 ரன்கள் குவித்தார். மொத்தமாக 77 பந்துகளில் அவர் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2-வது அதிவேக சதம் அடித்த வீரர் என்ற பெருமை இப்போட்டியின் மூலம் இவருக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அவரது அதிரடி ஆட்டம் காரணமாக இங்கிலாந்து அணி வெகு சீக்கிரத்தில் வெற்றிகண்டது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடர் எனக்கு அந்த உந்து சக்தியைக் கொடுத்தது

- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னர் கவுன்டி தொடரில் நான் விளையாட வேண்டும் என்று நிறைய பேர் ஆலோசனை கூறினார்கள். இருப்பினும் நான் ஐபிஎல் தொடரில் பங்குபெற்று விளையாடினேன்.

“நிறைய பேர் என்னிடம் ஐபிஎல் தொடரில் நான் பங்கேற்க கூடாது என்று கூறினார்கள். இருப்பினும் நான் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்று முடிவு செய்து விளையாடினேன். உலகின் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு எதிராக சிறந்த விளையாட்டு தொடரில் விளையாடுவது அதிர்ஷ்டம்தான்.

போட்டியில் சூழ்நிலைக்கு தகுந்தவாறு கியரை மாற்றி ஆடுவது மிகவும் முக்கியம். குறிப்பாக ஒரு அழுத்தம் நிறைந்த நேரத்தில் நீங்கள் உங்களை எந்த அளவுக்கு ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாக விளையாடும் பட்சத்தில் நீங்கள் இன்னும் சிறந்த வீரராக வலம் வருவீர்கள்”, என்று தான் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவ்வாறு கியரை மாற்றி விளையாட ஐபிஎல் தொடர் உதவியது என்று ஜானி பேர்ஸ்டோ கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் கடந்த 10 வருடங்களில் நிறைய தலைமை பயிற்சியாளர் மற்றும் கேப்டனுக்கு போட்டியில் விளையாடி இருக்கிறேன். அவர்கள் அனைவரும் என்னிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வந்தார்கள். தற்பொழுது பிரண்டன் மெக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் கீழ் விளையாடி கொண்டிருக்கிறேன். தொடர்ந்து இவர்களுக்குக் கீழ் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் என்றும் ஜானி பேர்ஸ்டோ கூறியுள்ளார்.

- Advertisement -