விஜய் ஷங்கரை 1.4 கோடி கொடுத்து வாங்கியதற்கு இதுதான் காரணம் – குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் நெஹ்ரா

0
911
Vijay Shankar Gujarat Titans

பேட்டிங் ஆடுவது அதே சமயத்தில் வேகப்பந்து வீசுவது என்பது மிகவும் அரிய கலை. அந்தக் கலையை செய்யக்கூடிய இந்திய வீரர்கள் மிக மிக குறைவு. கபில் தேவுக்கு பிறகு இப்படி ஒரு வேகப்பந்து வீச்சாளரை இந்திய அணி அடையாளம் கண்டு கொள்வது மிகப் பெரிய சிரமம் ஏற்பட்டது. அந்தக் குறையை ஹர்திக் பாண்டியா தீர்த்து விடுவார் என்று பலரும் கூறி வந்த நிலையில் அவர் தற்போது மிகவும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணி இதே போபோல விஜய் சங்கரை பயன்படுத்தியது.

ஆனால் அவரும் சரியாக விளையாடாததால் அவருக்கு இந்திய அணி அதன் பிறகு வாய்ப்பு கொடுக்கவில்லை. தற்போது விஜயசங்கர் ஐபிஎல் ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இது குறித்து பேசிய அந்த அணியின் பயிற்சியாளராகும் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரும் ஆன ஆஷிஸ் நெஹ்ரா, நாங்கள் விஜய் ஷங்கரை மிகவும் நம்புகிறோம் என்றும் அவர் இப்படி ஆடப் போகிறார் என்பதை காண காத்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் அவர் ஏற்கனவே இந்தியாவிற்கு விளையாடிய அனுபவம் கை கொடுக்கும் என்றும் நெஹ்ரா கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சை நம்பி நாங்கள் அவரை எடுக்கவில்லை என்று நெஹ்ரா பேசியிருந்தார். அவர் பந்து வீசாமல் போனாலும் பேட்டிங் வீரராகவே எங்கள் அணியில் ஆடுவார் என்று கூறியிருந்தார். ஆக இதன்படி பார்த்தால், விஜய் சங்கருக்கு நிச்சயம் பந்துவீச அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பந்துவீச்சோடு மட்டுமில்லாமல் அந்த அணிக்கு 3-வது வீரராக விளையாடும் வாய்ப்பு விஜய் சங்கருக்கு கிடைக்கும் என்று தெரிய வருகிறது. ஹர்திக் 4-வது வீரராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜேசன் ராய் மற்றும் சுப்மன் கில் துவக்க வீரராக விளையாட, டெவாட்டியா, வேட் ன, ரஷித் போன்ற வீரர்கள் கீழ் வரிசையில் விளையாடுவார்கள் என்பதும் கூறப்பட்டுள்ளது.

பல ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு குஜராத் ரசிகர்களுக்கு ஒரு கிரிக்கெட் அணி கிடைத்துள்ளது. வரும் ஐபிஎல் தொடரில் அந்த அணி எவ்வாறு விளையாடப் போகிறது என்பதை கானா குஜராத் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்

- Advertisement -