கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் டிஆர்பி குறைந்த காரணம் இதுதான் – பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா விளக்கம்

0
92

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் தொடர் சந்தித்த டிவி ரேட்டிங்கை விட இந்த ஆண்டு டிவி ரேட்டிங் என்று சொல்லப்படுகிற டிஆர்பி சற்று குறைவாக உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு முதல் எட்டு போட்டிகளின் முடிவில் டிவி ரேட்டிங் 3.75 ஆக இருந்தது ஆனால் இந்த ஆண்டு 8 போட்டிகளின் முடிவில் டிவி ரேட்டிங் 2.52 ஆக மட்டுமே இருந்துள்ளது. கடந்த ஆண்டை விட முதல் வாரத்தின் ஒட்டுமொத்த ரீச் 14 சதவீதம் குறைந்து 229.06 மில்லியனாக உள்ளது. இது கடந்த ஆண்டில் 267.7 மில்லியனாக இருந்தது குறிப்படத்தக்கது.2019 ஆம் ஆண்டு கிடைத்த ஒட்டுமொத்த ரீச் 268 மில்லியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த காரணமாக தான் டிவி ரேட்டிங் தற்பொழுது குறைந்துள்ளது

ஒவ்வொரு அணி நிர்வாகிகளும் 2021 ஆம் ஆண்டு போல 2 பகுதிகளாக ஐபிஎல் தொடரில் நடத்தலாம். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் முதல் பாதி நடத்தப்பட்டது. கொரோனா காரணமாக பின்னர் அது நிறுத்தப்பட்டு இரண்டாம் பாதி ஐந்து மாதங்கள் கழித்து ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது.

அதுபோன்று இனி இந்தியாவில் ஐபிஎல் தொடர் இரண்டு பகுதிகளாக பிரித்து நடத்தலாம் டிவி ரேட்டிங் நன்றாக வரும் என்று ஆலோசனை கூறியுள்ளனர். அதற்கு பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தன் தரப்பு விளக்கத்தை கொடுத்துள்ளார்.

- Advertisement -

அனைவரும் கூறுவது போல் இரண்டு பகுதிகளாக ஐபிஎல் தொடரை நடத்துவதில் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இரண்டு பகுதிகளாக பிரித்து நடத்தப்படும் நிலையில் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களின் கால அட்டவணையை நாம் பார்க்கவேண்டும். அவர்கள் இங்கு வந்து பங்கேற்கும் வகையில் அந்த கால அட்டவணை சரியாக அமைய வேண்டும். எனவே இதில் யோசிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்கள் அனைவரும் வீட்டில் தான் இருந்தனர். கொரோனா காரணமாக மக்கள் அனைவருக்கும் பொழுதுபோக்காக அமைந்தது தொலைக்காட்சி மற்றும் மொபைல் மட்டும்தான். எனவே அனைவரும் வீட்டில் இருந்து ஐபிஎல் போட்டியை கண்டு களித்தனர் டிவி ரேட்டிங் அதிகமாக வந்தது.

இரண்டு வருடங்களாக வீட்டில் முடங்கி இருந்த மக்கள் தற்போது சுற்றுலா தளத்திற்கு சென்று கொண்டிருக்கின்றனர். நிறைய நேரத்தை குடும்பத்துடனும், நண்பர்களுடனும் இணைந்து ஹோட்டல்கள், பப், என தங்களது நேரத்தை செலவு செய்து கொண்டிருக்கின்றனர். போட்டியை அனைவரும் ஒன்றாகக் கூடியிருந்து அந்தந்த இடங்களில் பார்ப்பாள் டிஆர்பி குறைந்திருக்கலாம்.

நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று கூடி அவ்வாறு பார்க்கையில் குறிப்பாக மாலைநேர போட்டிகளை அவர்கள் அவ்வாறு அதிக வாய்ப்பு உண்டு. எனவே இதன் காரணமாக தான் டிஆர்பி குறைந்துள்ளது என்றும் இனி வரும் நாட்களில் முன்புபோல டிஆர்பி அதிக அளவில் இருக்கும் என்றும் ஜெய்ஷா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.